Header Ads



பரந்த கூட்டணிக்கு தயாராகும் யானை


 எதிர்காலத் தேர்தல்களில் போட்டியிடும் வகையில் பரந்துபட்ட கூட்டணியை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.


கட்சியுடன் கூட்டணி அமைப்பது குறித்து ஏற்கனவே பல தரப்புக்கள் கலந்துரையாடி வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் உதவித் தலைவரும் முன்னாள் கல்வி அமைச்சருமான அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.


கடந்த தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவை ஒப்புக்கொண்ட அவர், நாட்டை முன்னோக்கி வழிநடத்தும் தரமான மற்றும் முற்போக்கான தலைவர்கள் மற்றும் கொள்கைகள் கட்சிக்கு இருப்பதாக தெரிவித்தார்.


ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரேயொரு உறுப்பினராக பாராளுமன்றத்தில் இருந்தும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதை பாரிய சவாலாக ஏற்றுக்கொண்டார் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


அரசாங்கத்தை அமைக்கும் அடுத்த கூட்டணியை அமைப்பதில் ஐக்கிய தேசியக் கட்சியே முன்னிலை வகிக்கும்.


எதிர்காலத்தில் எந்தக் கட்சியும் தனித்து ஆட்சி அமைக்க முடியாது, எனவே தேர்தலில் வெற்றிபெற தலைவர்களும் கட்சிகளும் கூட்டணி அமைக்க வேண்டும்.


அடுத்த வருடத்தின் நடுப்பகுதியில் ஐக்கிய தேசியக் கட்சி ஒரு பரந்த கூட்டணியை முன்னெடுத்து நாட்டை ஆட்சி செய்யும் எனவும் அவர் தெரிவித்தார்.


மத்தியவாதக் கட்சிகளின் கொள்கைகளை கடுமையாக எதிர்க்கும் கட்சிகளில் இருந்தும் கூட ஏற்கனவே பல பிரிவுகள் ஜனாதிபதியுடன் இணைந்து பணியாற்ற உறுதியளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


நாட்டின் நெருக்கடியான பிரச்சினைகளுக்கு அரசியல் சித்தாந்தங்கள் எதுவாக இருந்தாலும் அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து தீர்வு காண வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

2 comments:

Powered by Blogger.