வெளிநாட்டில் இருந்து, இலங்கைக்கு வந்த பொதி - யுவதி கைது
வெளிநாட்டிலிருந்து விமானம் மூலம் அனுப்பப்பட்ட பொதியில் போதைப்பொருள் இருந்தமையையடுத்து நேற்றுமுன்தினம் மாலை காலி பிரதான தபால் நிலையத்தின் வெளிநாட்டு பொதி பிரிவுக்கு குறித்த பொதியைப் பெற்றுக் கொள்ள வந்த யுவதியொருவர் கைது செய்யப்பட்டதாக போதைப்பொருள் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஹபராதுவ தல்பே பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதுடைய யுவதியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். அந்த பொதி Maria Guada Lopa Santos, 27 Toledo, Yuba City Ca 05 95991 என்ற முகவரியில் இருந்து அனுப்பப்பட்டுள்ளது. சந்தேகமடைந்த அதிகாரிகள் பொதியை சோதனை செய்தனர்.
இதன் போது அந்த பொதியில், 1960 கிராம் குஷ் போதைப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அதன்படி, போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து அதிகாரிகள் பொதியை பெற்றுக்கொள்ள வந்த யுவதியை சந்தேகத்தில் கைது செய்தனர்.
Post a Comment