ஈஸ்டர் சந்தேகநபர் வீதியில் கொல்லப்பட்டு, அராஜக போக்கு தலைதூக்கியுள்ளது.
ஈஸ்டர் சந்தேக நபர் ஒருவர் வீதியில் கொல்லப்பட்டுள்ளார், சட்டத்தை மதிக்காத அராஜக போக்கு தலைதூக்கியுள்ளது.
சட்டத்தை மதிக்காது அராஜகம் மேலோங்கிய வன்னம் ஈஸ்டர் தாக்குதல் போன்ற சம்பவங்கள் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபரொருவர் கொல்லப்பட்டமை தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று (29) பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.
சிரந்த அமரசிங்க என்ற சமூக ஊடக செயற்பாட்டாளருக்கு கொலை மிரட்டல் விடுக்கும் காணொளியொன்று உள்ளதாகவும்,மறுபுறம்,ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஒருவர் வீதியில் கொல்லப்பட்டுள்ளார் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,சமூகம் அச்சத்தில் மூழ்கும் முன் இது தொடர்பாக சபை முதல்வர் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
Post a Comment