ஆண்கள் ஆண்கள்தான், தனுஷ்கவின் பாலியல் கொடுமையை ஆதரிக்கும் எஸ்.பி.
இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
அவுஸ்திரேலிய பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் குணதிலக்க கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது அவர்களுக்கு வழக்கத்தை விட அதிக சுதந்திரம் அளிக்கப்பட்டதாக நான் உணர்கிறேன்,
அவுஸ்திரேலியாவில் சிலர் விபசாரத்தில் ஈடுபடுவது ஒரு தொழிலாக இருப்பதையும், அவர்கள் மீதான பாலியல் வன்கொடுமை தொடர்பான குற்றச்சாட்டுகள் மிகவும் பொதுவானவை என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும், எனவே எங்கள் வீரர் மீது அனைத்து பழிகளையும் நாம் போட வேண்டியதில்லை.
வீரர்களின் ஆட்டத்தை பாதிக்காத வகையில் எல்லைக்குள் இருக்கும் வரை அவர்களுக்கு சுதந்திரம் வழங்கப்பட வேண்டும்.
எப்போதாவது ஒரு கிளப்புக்குச் செல்வதில் நான் எந்தத் தவறும் காணவில்லை, ஆனால் இது மீண்டும் மீண்டும் நடந்தால், அவர் பயிற்சிகளைத் தவறவிட்டு, விளையாட்டின் மீதான தனது கவனத்தையும் அர்ப்பணிப்பையும் இழக்க நேரிடும். ஆனால் இந்த விஷயங்களை ஒருமுறை அல்லது இரண்டு முறை அனுபவிக்க அனுமதிப்பது தவறல்ல. நான் பார்த்தவற்றின் படியும், வழக்கறிஞர்களின் கூற்றுப்படியும், தனுஷ்க விடுவிக்கப்பட வேண்டும். அவர் விடுதலையானதும் அவரை தொடர்ந்து அணிக்காக விளையாட அனுமதிக்க வேண்டும்,” என்றார்.
தி மோர்னிங்
Condoms கொடுத்து அனுப்புங்கள வீரர்களுக்கு. இல்லையேல் சுதந்திர காற்றை சுவாசிக்கும்போது கிரிமி உட்சென்றுவிடும்.
ReplyDeleteஅவுஸ்ரேலியா போன்ற முன்னேற்றமடைந்த நாட்டின் நீதித்துறையை அவமதிக்கும் இந்த பெரிய கழுதையை நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் தூக்கிலிப்பட வேண்டியவன் பாராளுமன்றத்தில் முக்கியமாக நாட்டு மக்களின் சொத்துக்களை திண்டு அனுபவித்துக் கொண்டு நாட்டின் சட்டத்தையும் அவமதிக்கும் இவனைப் போன்ற தரம் கெட்டவர்களை பாராளுமன்றத்துக்கு அனுப்பியவர்கள் யார் என்பதை சரியாக விசாரணை செய்து அத்தனை பேரையும் சிறைக்கு அனுப்ப வேண்டும்.
ReplyDelete