யுவன் யாத்திரைப் பாதையை, அல்லாவின் ஒளி தழுவட்டும்
Karikalan R
யுவன்சங்கர் ராஜாவின் புகைப்படமொன்று.
இஹ்ராம் உடுப்பில் இருந்தார்.
சினிமா துறையில் இருப்பவர். பளபளப்பான ஆடைகளில் அவரை பார்த்திருக்கிறேன்.
இந்த ஆடை வித்தியாசமாக இருந்தது. Faqir போன்ற தோற்றம். 'The root of suffering is attachment! ' என்றார் புத்தர். ஒரு இளம் துறவியைப்போல் இருக்கிறார்.
துறவு எப்போதும் வாழ்க்கையை மறுப்பது ஆகாது. அது இன்பத்தை மறுப்பதும் அல்ல. துறவு , உண்மையில் இன்பத்தை ஒழுக்கங்களாக மாற்றுவதற்கே மேற்கொள்ளப்பட்டுகிறது.
யுவன் உம்ரா பயணம் மேற்கொள்கிறார்.
உம்ரா , இசுலாமியர்கள் மேற்கொள்ளும்
புனித யாத்திரை.
இசுலாமியர்களின் கடவுள் வணக்கம் மூன்று நிலைகளில் செயல்படுகிறது.
1. உடல் சார்ந்து. 2. பொருள் சார்ந்து. 3. உடல் பொருள் இரண்டும் சார்ந்து.
பொருள் சார்ந்த வணக்கத்தை
ஸதகா, ஸகாத் என்கிறார்கள்.
இவை ஏழைகளுக்காக ஒதுக்கப்படும் நிதிகள். இறைவன், கல்வி, மருத்துவம் என இந்நிதி வணக்கம் விரிந்த தன்மை கொண்டது.
உடலும் பொருளும் சார்ந்த இறைவணக்க யாத்திரைகளே உம்ராவும், ஹஜ்ஜூம்.
உம்ரா - தரிசிப்பது என பொருள்.
தைக்கப்படாத மேலாடை , கீழாடை உடுத்திய யுவனின் தோற்றம்தான் என்னை வசீகரித்தது.
இதைதான்,
'உண்பது நாழி, உடுப்பவை இரண்டே' என்கிறது தமிழ்.
இசுலாம் குறித்து தப்பெண்ணங்கள் பரப்பப்பட்டு வரும் நிலையில், யுவன்சங்கர் ராஜாவின் இந்த யாத்திரை, இசுலாத்தின் மாபெரும் அமைதி விருப்பத்தை , எளிமையை, தவத்தை வெளிப்படுத்துவதாக இருக்கிறது.
யுவன் யாத்திரைப் பாதையை,
அல்லாவின் ஒளி தழுவட்டும்.
Post a Comment