Header Ads



மொரோக்கோவிடம் தோல்வியடைந்ததால், பெல்ஜியத்தில் குழப்பம்


பெல்ஜியத்தின் தலைநகர் பிரஸ்ஸல்ஸ் நகரில் உதைபந்தாட்ட ரசிகர்கள் மோசமான செயற்பாடுகள் காரணமாக வன்முறையாக வெடித்துள்ளது.


உலகக் கிண்ண உதைப்பந்தாட்ட போட்டித்தொடரில் நேற்றைய தினம் பெல்ஜியம் மற்றும் மொரோக்கோ அணிகள் மோதின.


போட்டியில் மொராக்கோவிடம் 2 - 0 என்ற கோல் கணக்கில் மோசமான தோல்வி அடைந்ததால் பெல்ஜியம் ரசிகர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.


மோசமான தோல்விக்குப் பிறகு பெல்ஜியம் ரசிகர்கள் கோபத்தில் பிரஸ்ஸல்ஸ் நகரில் கலவரத்தில் ஈடுபட்டுனர்.


வீதியால் சென்ற வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டு 500 மேற்பட்ட ரசிகர்கள் வன்முறையில் ஈடுபட்டமையால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது.


வன்முறையாளர்களை கட்டுப்படுத்த பொலிஸார் தண்ணீர் தாக்குதல், கண்ணீர் புகை தாக்குதல் மேற்கொண்டனர்.  

No comments

Powered by Blogger.