முஸ்லிம் சமூகத்தின் உடமையை பாதுகாப்பதற்கான, மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு திரண்டு வாருங்கள்
இலங்கை முஸ்லிம்களின் பாரம்பரிய இந்த வக்பும், இலங்கை முஸ்லிம்களின் மார்க்க கல்வியின் பிரதான சின்னமான கபூரிய்யாவும் அதன் உடமையான கிராண்ட்பாஸ் (முன்னர் சுலைமான் வைத்தியசாலை அமைந்திருந்த) காணியும் மறுமைநாள் வரை பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நன்நோக்கில் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுக்க கல்லூரி பழைய மாணவர் சங்கம் தீர்மாணித்துள்ளது.
கல்லூரியையும் அதன் உடமையையும் சூரையாடும் நோக்கில் நம்பிக்கையாளர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ள முறைகேடான ஒப்பந்தகள் குறித்தும் அவற்றின் மூலம் பெறப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய்கள் குறித்தும் பழைய மாணவர்கள் கேள்வியெழுப்பியதும், பழைய மாணவர்கள் மீதும், கல்லூரியின் கல்வியியல் கொள்கை மீதும் உண்மைக்கு புறம்பான செய்திகளை சமூகமயப்படுத்தி, முஸ்லிம் சமூத்திற்கு மத்தியில் பிரிவினையையும், குரோத மனப்பாண்மையையும் வளர்க்க நம்பிக்கையாளர்கள் முயற்சிகள் மேற்கொண்டு வந்துள்ளனர்.
எனவே முஸ்லிம் சமூகத்தின் உடமையொன்றை பாதுகாக்க முன்னெடுக்கும் இப்போராட்டத்தில் சமூக ஆர்வலர்கள், நலன் விரும்பிகள், பொது மக்கள் என அனைவரும் பங்குகொள்ள அன்பாக அழைக்கிறோம்.
ஐ.எல்.தில்ஷாத் முஹம்மத்
பொதுச் செயலாளர்
பழைய மாணவர் சங்கம்
கபூரிய்யா அரபுக் கல்லூரி.
Post a Comment