Header Ads



அகதிகளாக மாறவுள்ள அரசியல்வாதிகள்

 


முன்னாள் சிரேஷ்ட உறுப்பினர்கள் எதைச் சொன்னாலும், செய்தாலும், சட்டபூர்வமான சிறிலங்கா சுதந்திரக் கட்சியானது முறையாக நியமிக்கப்பட்ட தலைவர், பொதுச் செயலாளரால் வழிநடத்தப்பட்டு, மத்திய குழு, கொள்கைகள் நிர்வகிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்படுமென சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.


சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று(26) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்திருந்தார்.


மேலும் அவர் கருத்து தெரிவிக்ககையில், “அடுத்த பொதுத் தேர்தலுக்குப் பிறகு சில அரசியல் வாதிகள் அரசியல் அகதிகளாக மாறுவதை யாராலும் தடுக்க முடியாது,ஏனெனில் அவர்கள் சிறிலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து தேர்தலில் போட்டியிட வேண்டும். அக்கட்சி முழு இலங்கையாலும் நிராகரிக்கப்பட்ட மற்றும் வெறுக்கப்பட்ட கட்சியாகும்.


சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தற்போதைய தலைமையின் நியாயத்தன்மை குறித்து சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.


தேர்தல்கள் ஆணைக்குழுவினால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அடையாளப்படுத்தப்படும் எந்தவொரு அரசியல் கட்சியும் சட்டத்தின் கீழ் சட்டபூர்வமானது.


மேலும், சிறிலங்கா சுதந்திரக் கட்சி கூறுவதை நீதிமன்றங்களும் ஏற்றுக்கொள்ளும் என்பதையும் நான் அவர்களுக்குச் சொல்ல வேண்டும். கட்சிக்கு துரோகம் இழைத்த மற்றும் கட்சியின் அரசியலமைப்பை மீறிய அனைத்து உறுப்பினர்களும் ஏற்கனவே இடைநிறுத்தப்பட்டுள்ளனர். அரசியலமைப்பின் விதிகளுக்கு இணங்க, அவர்களின் நாடாளுமன்ற உறுப்புரிமையை பறிக்கும் வகையில் கட்சியில் இருந்து வெளியேற்றப்படுவர்.


சந்திரிக்கா குமாரதுங்க, தான் பல தடவைகள் கட்சி மாறியதாக கருத்து தெரிவித்திருந்தார்.


1981 ஆம் ஆண்டு கட்சியின் தலைவர் திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்கவிற்கு எதிராக ஏழு தடவைகள் கட்சி மாறி நீதிமன்றத்திற்கு சென்றவர் சந்திரிக்கா ஆவார்.


சந்திரிகா மோசமாக நடந்ததை கண்டு வெறுப்புடன் நான் சிறிலங்கா சுதந்திரக் கட்சியை விட்டு வெளியேறி ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்தேன்.


ஆனால், நாடாளுமன்ற உறுப்புரிமையை விட்டு மரியாதையுடன் மீண்டும் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குத் திரும்பினேன். சந்திரிகா தற்போது ரணில்-ராஜபக்ஷ ஆட்சியின் மடியில் இருந்துகொண்டு உயர்மட்ட ஆலோசகராக மாறிவிட்டார்” என்று குற்றம் சுமத்தியபடி தெரிவித்திருந்தார்.ibc

No comments

Powered by Blogger.