Header Ads



அரசியல்வாதிகள் நாட்டை உலக வல்லரசுகளுக்கு விற்று, இலங்கையை வறுமையான நாடாக மாற்றுகின்றனர்


நாட்டுக்கான புதிய தேர்தல் முறைமையின் முக்கியத்துவத்தை கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் எடுத்துரைத்துள்ளார்.


கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய கர்தினால் மல்கம் ரஞ்சித், 1978 ஆம் ஆண்டுக்கு முன்னர், உள்ளூராட்சி மட்டத்திலோ அல்லது பாராளுமன்றத்திலோ நாட்டிலுள்ள ஒவ்வொரு தொகுதி ஒரு பொதுப் பிரதிநிதியால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டது.


இவ்வாறான மக்கள் பிரதிநிதிகள் அடுத்த தேர்தலில் தெரிவு செய்யப்படுவதற்கு அந்தந்த தொகுதிகளுக்காக உழைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக கொழும்பு பேராயர் குறிப்பிட்டார்.


1978க்குப் பின்னரான தேர்தல் முறை நாட்டிற்கு பேரழிவை ஏற்படுத்தியுள்ளது.


பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுபவர்கள் முழு மாவட்டத்திலிருந்தும் வாக்குகள் தேவைப்படுவதால், அவர்கள் தங்கள் பிரசாரங்களுக்கு நிதியளிப்பதற்காக வணிகர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.


அரசியல்வாதிகள் குறிப்பிட்ட தொகுதிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டால், மக்களுக்குச் சிறப்பாகச் சேவை செய்வார்கள் என்றும் ஆண்டகை குறிப்பிட்டார்.


இதேவேளை, அரசியல்வாதிகள் நாட்டை உலக வல்லரசுகளுக்கு விற்று இலங்கையை வறுமையான நாடாக மாற்றுவதாக கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் குற்றம் சுமத்தியுள்ளார்.

No comments

Powered by Blogger.