ஜப்பானில் மரணமான இலங்கைப் பெண், விசாரணைகள் தாமதிக்கப்படுகிறதா..?
இந்த தகவலை ஜப்பானிய அரசாங்கம் நீதிமன்றில் நேற்று தெரிவித்ததாக மரணமான பெண்ணின் குடும்ப உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார் .
விஷ்மா சண்டமாலி நகோயா பிராந்திய குடிவரவு சேவைகள் பணியகத்தில் 2021 மார்ச் மாதத்தில் குறித்த இலங்கைப் பெண் மரணமானார் .
இந்த மரணம் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட வேண்டிய 295 மணிநேர சீசீரீவி காட்சிகளை நீதிமன்றில் சமர்ப்பிக்க வேண்டும் என்பதே பெண்ணின் குடும்பத்தினரின் கோரிக்கையாக இருந்தது . இதன் மூலம் ஜப்பானிய அதிகாரிகளால் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படாத தரவுகளை அறிந்து கொள்ள முடியும் என்று பெண்ணின் குடும்பத்தினர் தெரிவித்து வருகின்றனர் .
முன்னதாக 2022 நவம்பர் 14 ஆம் திகதியன்று ஜப்பானிய அரசாங்கத்துக்கு காலக்கெடு விதிக்கப்பட்டிருந்த நிலையில் சாதகமான பதிலை ஜப்பானிய அரசாங்கம் நேற்று வழங்கியுள்ளது . இதுகுறித்து கருத்துரைத்துள்ள மரணமான இலங்கை பெண்ணுக்காக வாதாடும் சட்டத்தரணி , இந்த காணொளிக் காட்சியை வழங்குவதற்கு ஏன் இவ்வளவு காலதாமதம் என்று கேள்வி எழுப்பியுள்ளார் .
இந்தநிலையில் முழு 295 மணிநேர காணொளிக் காட்சிகளையும் அரசாங்கம் சமர்ப்பிக்கும் என்று தாம் இதேவேளை 2014 ஆம் ஆண்டு ஜப்பானின் குடியேற்ற மையம் ஒன்றில் மரணமான கெமரூன் நாட்டின் பொதுமகன் தொடர்பான வழக்கில் சீசீரீவி காணொளி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது .
மரணமானவரின் குடும்பத்துக்கு இழப்பீடு இதன்மூலம் அவர் துன்புறுத்தப்பட்டமை தெரியவந்தமையை அடுத்து , ஜப்பானிய அரசாங்கம் வழங்க வேண்டும் உத்தரவிட்டிருந்தமையை ஜப்பானிய ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன .
Post a Comment