பதவியை இழப்பாரா டயானா..? அம்பலத்திற்கு வந்துள்ள உண்மைகள்
சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே பிரித்தானிய பிரஜை எனவும் அவரது வீசா கடந்த 2014 ஆம் ஆண்டுடன் காலாவதியாகியுள்ளதாகவும் குடிவரவு குடியகல்வு திணைக்களம் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளது .
குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் களஞ்சிய தரவுகளின் அடிப்படையில் , நயனா சமன்மலி அல்லது டயனா நடாஷா என அழைக்கப்படும் நடாஷா கெகனதுர பிரித்தானிய பிரஜை என் அறிவிக்கப்பட்டுள்ளது .
இந்த நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் போலி பிறப்புச்சான்றிதழ் மற்றும் தேசிய அடையாள அட்டையை பெற்று போலிக் கடவுச்சீட்டை அவர் பெற்றுள்ளார் .
நாடாளுமன்ற உறுப்பினர் டயனா கமகே இரட்டை குடியுரிமை கொண்டவர் அல்லர் .
எனினும் பிரித்தானிய குடியுரிமையுடன், இலங்கைக்கான போலிக்கடவுச்சீட்டை வைத்திருப்பவர் என்றும் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மூலம் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளனர் .
இதனையடுத்து இந்த விடயம் தொடர்பில் மேலதிக விபரங்களை நீதிமன்றுக்கு வழங்கி வழக்கு விசாரணைகளை முடிவுறுத்த ஒத்துழைக்குமாறு நீதிமன்றம் குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளது .
Post a Comment