Header Ads



கொரியாவில் உயிரிழந்த முஸ்லிம் இளைஞனுக்கு 9 மில்லியன் நட்டஈடு - ஜனாஸா செலவையும் ஏற்றது


கொரியாவில் உயிரிழந்துள்ள கண்டியைச் சேர்ந்த இளைஞனின் குடும்பத்திற்கு நட்ட ஈடாக, ஒன்பது மில்லியன் ரூபாவை வழங்குவதற்கு கொரிய தூதரகம் இணக்கம் தெரிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர்


அலிசப்ரி பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.


பாராளுமன்றத்தில் நேற்று எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல எம்பி, எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதில் அளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.


கொரியாவில் உயிரிழந்த கண்டி, உடதலவின்னையைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞனுக்கு நட்டஈடு பெற்றுக்கொடுக்க அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கை என்ன என, லக்ஷ்மன் கிரியெல்ல எம்பி கேள்வி எழுப்பினார்.


இதற்குப் பதில் அளித்த அமைச்சர்,கொரியாவில் உயிரிழந்த இளைஞனின் சடலத்தை கொரிய தூதரகத்தின் உதவியுடன் நான்கு நாட்களில் நாட்டுக்கு கொண்டுவர முடிந்துள்ளது. அதன் பின்னர் உயிரிழந்த இளைஞனின் குடும்பத்துக்கு நட்டஈடு வழங்குவது தொடர்பாக கொரிய தூதரகத்துடன் நாம் கலந்துரையாடினோம்.இதன் பயனாக ஒன்பது மில்லியன் ரூபா நட்ட ஈட்டுத் தொகையை வழங்க அவர்கள் இணக்கம் தெரிவித்தனர்


அதேபோன்று ஜனாசாவை நாட்டுக்கு கொண்டுவர ஏற்பட்ட செலவையும் கொரிய தூதரகம் ஏற்றுக்கொளளை உறுதியளித்துள்ளதாகவும் அமைச்சர் அலி சப்ரி மேலும் தெரிவித்தார்.


லோரன்ஸ் செல்வநாயகம்

No comments

Powered by Blogger.