Header Ads



ஒரு கோடியே 78 இலட்சம் ரூபா பணம் தொடர்பில் கோட்டாபயவிடம் வாக்குமூலம் பெறுமாறு நீதிமன்றம் உத்தரவு


ஆர்ப்பாட்டக்காரர்களால் ஜனாதிபதி மாளிகையில் இருந்து ஒரு கோடியே 78 இலட்சம் ரூபா பணம் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பிலான விசாரணைகள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் பெறுமாறு பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


இது தொடர்பான உத்தரவை கோட்டை நீதவான் திலின கமகே கோட்டை பொலிஸாருக்கு வழங்கியதாக “அத தெரண” செய்தியாளர் தெரிவித்தார். 


முன்னாள் ஜனாதிபதியின் படுக்கையறையில் கண்டெடுக்கப்பட்ட பணம் இலஞ்சமாக அல்லது வேறு ஏதாவது விடயம் தொடர்பில் பெறப்பட்டதா என்பது தொடர்பில் ஆராயுமாறு ஜனாதிபதியின் சட்டத்தரணி றியன்சி அர்சகுலரத்ன விடுத்த கோரிக்கையை பரிசீலித்த நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். 


முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மிரிஹானவில் உள்ள அவரது இல்லத்தில் இல்லை என பொலிஸார் வழங்கிய தகவலை கவனத்தில் கொண்ட நீதவான், அவர் தற்போது வசிக்கும் இல்லத்திற்கு சென்று வாக்குமூலம் பெற்றுக்கொள்ளுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்

1 comment:

  1. இவனுடைய கதையைப் பிரசுரிப்பது ஊடகத்தின் சுதந்திரம். அது பற்றி எங்களுக்கு விருப்பமில்லாவிட்டாலும் எங்களால் எதுவும் செய்ய முடியாது. ஆனால் நாட்டை நாசமாக்கி, நாட்டு மக்களின் வாழ்க்கையை நெருக்கடிக்கு உள்ளாக்கி அவலநிலைக்குக் கொண்டு சென்ற இவனுடைய போடோவைப் பிரசுரித்து வாசகர்களாகிய எம்மை நெருக்கடியில் ஆக்க வேண்டாம் என வாசகர்கள் சார்பாக பணிவாக வேண்டிக் கொள்கின்றேன்.

    ReplyDelete

Powered by Blogger.