Header Ads



நாட்டை சரியான பாதைக்கு கொண்டுசெல்ல, 6 தீர்வுகளைக் கூறிய எதிர்க்கட்சித் தலைவர்


நாட்டை சரியான பாதைக்கு கொண்டு செல்வதற்கான ஆறு தீர்வுகளை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அவர்கள் இன்று (21) பாராளுமன்றத்தில் முன்வைத்தார்கள்.


சரிபார்க்கப்பட்ட தகவல் ஆதாரங்கள் மற்றும் தரவுகளை முறையாக சபைக்கு சமர்ப்பித்த வன்னம் இவ்வாறு தீர்வுகளை முன்வைத்தார்.


இதன் பிரகாரம்,


இருப்புக்களின் மீதான கருதப்பட்ட உள்ளீட்டு வரியை 5 இல் இருந்து 10 வீதமாக அதிகரிப்பதன் மூலம் 90 பில்லியன் ரூபா அரசாங்க வருமானத்தை பெற்றுக்கொள்ள முடியும் எனவும்,அதன் மூலம் ஓய்வூதியம் பெறுவோருக்கு அநீதி ஏற்பட்டால்,ஈட்டிய வட்டிக்கு மேலதிகமாக 1 சதவீதம் நிவாரணம் வழங்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த வரி முறைமையை நியாயப்படுத்த முடியுமான போதிலும், உழைக்கும் மக்களுக்கு பாதகமாக வரிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன எனவும்,இது தொடர்பான பல தரவு அறிக்கைகளை ஹன்சார்ட் பதிவுட்குட்படுத்துவதாகவும் எதிர்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


அதேபோன்று வரிச்சலுகைகள் வழங்குவது தொடர்பிலும் எதிர்க்கட்சித் தலைவர் கவனத்தை திருப்பினார்.உதாரணத்திற்கு சீனி வரி மோசடியில்,50 ரூபாயில் இருந்து 25 ரூபாவாக குறைத்ததால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளமையினால்,வரிச்சலுகைகள் வழங்கும்போது சரியான மதிப்பீட்டை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.சீனி வரி மோசடி காரணமாக அரச வருமானம் 48 பில்லியன் ரூபா இழக்கப்பட்டுள்ளதாகவும்,அந்த தவறு எதிர்வரும் ஐக்கிய மக்கள் சக்தி அரசில் திருத்தப்பட்டு இழந்த வரி வருமானம் மீளப்பெறப்படும் எனவும் தெரிவித்தார்.அதேபோல்,தனது நண்பர்களுக்கு சலுகைகளை வழங்கி மக்கள் மீது அதிக வரிச்சுமையை சுமத்துவதை கண்டிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.


அவ்வாறே,சில அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் புகையிலை வரியை உயர்த்த விரும்பவில்லை எனவும்,புகையிலை,மதுபான நிறுவனங்களில் இருந்து சலுகை இலாபம் பெறுகிறார்கள் எனவும், இதன் காரணமாக, புகையிலையால் அரச வரி வருவாய் குறைந்து, புகையிலை நிறுவனங்களின் இலாபம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார். எனவே சரியான வரிச்சூத்திரத்தை நடைமுறைப்படுத்தினால் இதன் மூலம் 63 பில்லியன் ரூபா இலாபத்தை பெற முடியும் எனவும்,அதன் மூலம் உணவுப் பணவீக்கத்தைக் கூட இல்லாதொழிக்க முடியும் எனவும் தெரிவித்தார்.


இன்றைய நூற்றுக்கு 70 சதவீதத்திற்கும் அதிகமான பணவீக்க விகிதத்தின் மத்தியில் உழைக்கும் மக்களின் சேமலாபம் சார் மதிப்பு குறைந்துள்ளதாகவும்,கடந்த காலங்களில் ஊழியர் சேம நிதிய கொள்ளைகள் குறித்து பல தகவல்கள் வெளிப்பட்ட போதும்,

அதற்கான நீதி நிலைநாட்டப்படவில்லை எனவும், இந்த மோசடிகளில் பங்குகொண்டவர்கள் மீண்டும் மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டனர் எனவும் தெரிவித்த

எதிர்க்கட்சித் தலைவர்,தற்போது போலி மருத்துவக் காப்பீடு மூலம் ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியத்தில் இருந்து பணத்தை திருட முயற்சிக்கின்றனர் எனவும் தெரிவித்தார்.இந்தச் செயற்பாடுகளினால் இழந்த பணம் ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் மீளப் பெறப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.


அதேபோல்,உலக வங்கி அறிக்கைகளின்படி,வறியவர்களில் 58 சதவீதமானவர்களுக்கு மானியம் கிடைப்பதில்லை எனவும்,20 சதவீதம் நிர்வாகச் செலவுகளுக்குச் செல்வதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,இது குறித்து திருமதி திலினி குணவர்தன யோசனையொன்றை சமர்ப்பித்துள்ளார் எனவும் தெரிவித்தார். இதனடிப்படையில் நாட்டின் மின்சாரப் பாவனையை இலக்காகக் கொண்டு உரிய மானியங்களை வழங்கும் முறைமை ஒன்றைத் தயாரிக்க முடியும் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,இத்தகைய நல்ல திட்டம் இருந்தும்,அதற்கான ஏற்பாடுகளை விடுத்து மந்தகதியான பணியை அரசாங்கம் செயல்படுத்தி வருவதாக தெரிவித்தார்.இதை மானசீக அடிப்படையிலான திட்டமாக கருதுவதை விட விடயம் சார்ந்த திட்டமாக கருதி செயல்படுத்தலாம் எனவும் தெரிவித்தார்.


நம் நாட்டில் தொழிலாளர் படையில் பெண்களின் பங்களிப்பை மேலும் அதிகரிக்க, மகப்பேறு விடுப்பில் அரசங்கம் முதலீட்டை அதிகரிக்க முடியும் எனவும்,அதன் மூலம் மகத்தான பொருளாதார கட்டமைப்பை உருவாக்க முடியும் எனவும் தெரிவித்தார்.


சகல தகவல் பகுப்பாய்வு மற்றும் ஆய்வுகளுடன் முன்வைக்கப்படும் இந்த யோசனைகள் மூலம் நாட்டின் வருமானத்தை அதிகரிக்க முடியும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


சர்வதேசப் பொருளாதாரத்தில் பெரிய அளவில் வக்குரோத்துநிலை ஏற்படவில்லை என்றாலும்,இன்று நம் நாடு வக்குரோத்தாகி பணப் பற்றாக்குறையையும்,பெரும் பொருளாதார மந்த நிலையையும் எதிர்கொண்டுள்ளதாகவும்,இத்தகைய பாரிய நெருக்கடியில் தற்போதைய அரசாங்கத்தில் சமூக உடன்பாடே அல்லது மக்கள் உடன்பாடோ இல்லை எனவும்,நாட்டை வங்குரோத்தடையச் செய்த கும்பலில் 134 பேர் கொண்ட தரப்புடனுள்ள உடன்பாடே அவர்களிடம் இருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


ஊழல், நட்புவட்டார வாதம்,பேரிடர் மற்றும் அழிவு ஆகியவை முக்கிய காரணிகளாக இருந்ததால் இந்நிலைமை மோசமாகிவிட்டதாகவும் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,வரி செலுத்துவோரின் பணத்தை செலவழித்து பல நாட்களாக வரவு செலவுத் திட்ட விவாதம் நடத்துவதாகவும் தெரிவித்தார்.தகவல் தெரியாது,கையேந்தும் நிலையில்,அரசாங்கம் உரிய தகவல்களை வழங்க தவறி விட்டதாகவும்,நிறைவேற்று அதிகாரமிக்கவரை ஆதரிக்கும் பாராளுமன்றத்தின் கைப்பாவைகள் தாம் விரும்பியவாறு பாராளுமன்றத்தில் தகவல்களை மறைத்து, 220 இலட்சம் மக்களிடமிருந்தும் தகவல்களை மறைத்த வன்னம் அரசியல் பேரங்கள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.


அவர்கள் உற்ற நட்பு வட்டார வாதத்தை கடைப்பிடித்து,ஒரு பேரழிவிற்கு வழிவகுக்கும் அரசியல் டீல் செயல்படுத்தப்படுத்துவதாகவும் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,சபையில் ஜனாதிபதி சமர்ப்பித்த வரவு செலவுத் திட்ட உரையை நோக்கும் போது, தற்போதைய அரசாங்கத்தின் நிதி முகாமைத்துவத்தில் பல முரண்பாடுகள் காணப்படுவதாகவும் தெரிவித்தார்.


வரவு செலவுத் திட்டத்தில் சுற்றுச்சூழலுக்கு உகந்த,புதிய தொழில்நுட்ப பொருளாதார அமைப்பு பற்றி பேசப்பட்டாலும்,அதை செயல்படுத்தும் அங்கத்தினர்களுக்கு வரிக்குப் பின் வரி விதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த அனைத்து காரணங்களுக்கும் இடையே முரண்பாடுகள் உள்ளதாகவும் தெரிவித்த

எதிர்க்கட்சித் தலைவர், இது நாட்டுக்குப்  பயனற்ற ஒரு வரவு செலவுத் திட்டமெனவும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.