பக்கவாதத்தினால் வருடாந்தம் 4000 பேர் உயிரிழப்பு
பக்கவாத நோய் காரணமாக நாட்டில் வருடாந்தம் நான்காயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன், 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் அனுமதிக்கபடுவதாக சுகாதார அமைச்சின் தொற்றாநோய் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சாந்தி குணவர்தன குறிப்பிட்டார்.
மேலும், இந்த நோய் தொடர்பான அறிகுறிகள் தென்படும் பட்சத்தில், உடனடியாக வைத்தியசாலைக்கு செல்வது அவசியம் என அவர் தெரிவித்தார்.
இதன் மூலம் உயிரிழப்புகளை குறைக்க முடியும் என்பதோடு, நோய் நிலைமையை ஆரம்பித்திலேயே கட்டுப்படுத்த முடியும் என விசேட வைத்திய நிபுணர் சாந்தி குணவர்தன சுட்டிக்காட்டினார்.
Post a Comment