ஜனாதிபதிக்கு நாட்டை 2 வருடங்கள் ஆட்சி செய்ய அனுமதிக்குமாறு கோரிக்கை
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டை இரண்டு வருடங்கள் ஆட்சி செய்வதற்கும் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கும் அரசியல் கட்சிகள் அனுமதிக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
நாடு எதிர்நோக்கும் சவால்களை எதிர்கொள்வதற்கான தொலைநோக்குப் பார்வையும் வேலைத்திட்டமும் ஜனாதிபதி விக்கிரமசிங்கவிடம் இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் மகளிர் பிரிவின் தலைவி சாந்தினி கொங்கஹகே தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களில் ஜனாதிபதி மேற்கொண்டுள்ள முன்னேற்றங்களை மக்கள் அங்கீகரித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
பொருளாதாரம் படிப்படியாக ஸ்திரத்தன்மை அடைந்து வருவதாகவும், எனவே அதனை நாசப்படுத்த வேண்டாம் என எதிர்க்கட்சி அரசியல் குழுக்களிடம் வலியுறுத்தியுள்ளார்.
சுற்றுலாப் பயணிகளின் வருகை மற்றும் வர்த்தக நிலையங்கள் அதிகரித்து வருவதை பொதுமக்கள் அவதானிக்க முடியும்.
நாடு பெரும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வரும் நேரத்தில், எதிர்க்கட்சிகள் அரசியல் இலாபம் பெறுவதற்காக அதை சீர்குலைக்க முயற்சிக்கின்றன.
சகல பிரிவினரும் நாசவேலைகளை ஏற்படுத்துவதற்குப் பதிலாக ஜனாதிபதிக்கும் நாட்டைக் கட்டியெழுப்பும் அவரது வேலைத்திட்டத்துக்கும் ஆதரவளிக்க வேண்டுமென சாந்தினி கொங்கஹகே தெரிவித்துள்ளார்.
எதிர்கால சந்ததியினருக்காக நிலையான நாட்டை உருவாக்குவதற்காக அயராது உழைத்து வரும் ஜனாதிபதிக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
எந்தவொரு பிரிவினருக்கும் சிறந்த வேலைத்திட்டங்கள் அல்லது கொள்கைகள் இருந்தால் அவர்கள் முன்வந்து அவற்றை நடைமுறைப்படுத்த ஜனாதிபதியுடன் இணைந்து செயற்பட வேண்டும்.
அனைத்து பிரிவினரும் அரசியல் மற்றும் பிற வேறுபாடுகளை ஒதுக்கிவிட்டு நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப பாடுபட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment