தனுஷ்கவுக்காக 2 இலட்சம் டொலர் திரட்ட போராடும் இலங்கை கிரிக்கெட், ஹசரங்க பாரிய தொகையை வழங்கினார்
இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு 2 இலட்சம் அவுஸ்திரேலிய டொலர் பிணைத் தொகையை திரட்டுவதற்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் போராடி வருவதாக டெய்லிமிரர் செய்தி வெளியிட்டுள்ளது.
மீண்டும் ஒரு முறை பிணை கோரி மேல்முறையீடு செய்வதற்காக அடுத்த வார தொடக்கத்தில் நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவே குறித்த தொகையை திரட்ட முயல்வதாக அறியமுடிகிறது.
ஸ்ரீலங்கா கிரிக்கெட் அதிகாரிகள் நன்கொடைகளை கோரியுள்ள நிலையில், கிரிக்கெட் வீரர் வனிந்து ஹசரங்க, அடுத்த வாரம் பிணை விண்ணப்பத்தை தாக்கல் செய்வதற்கு பாரிய தொகையை கையளித்துள்ளார் என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Post a Comment