18 ஆம் தேதி மஹிந்தவை பிரதமராக்க முயற்சி
கேள்வி :- மஹிந்த மீண்டும் பிரதமராகும் சாத்தியம் உண்டா?
பதில் :- "இப்போதைக்கு பிரதமராவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. அவர்கள் அதற்கு முயற்சி எடுக்கிறார்கள். ஆனாலும், அது சாத்தியம் இல்லை. பொதுஜன பெரமுன நடத்திய கூட்டங்களில் எல்லா இடங்களிலும் எதிர்ப்புகள் வெளியிடப்படுகின்றன. இப்படி எதிர்ப்புகள் வந்தால், இப்போது இருக்கின்ற நிலைமையும் குறைவடைந்து விடும் என ஜனாதிபதி தரப்பினர் பயப்படுகின்றார்கள். அதனால், உடனடியாக பிரதமர் பதவியில் மாற்றங்கள் செய்தவற்கு உடன்பாடு இல்லை.''
கேள்வி :- அப்படியாயின், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அடுத்த கட்டமாக என்ன செய்யும்?
பதில் :- ''ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதித் தேர்தலுக்கு போகலாமா? இல்லையா? என்பது குறித்து ஆராய்ந்து வருகிறார். அப்படி ஜனாதிபதித் தேர்தலுக்கு போனால், ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு வழங்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன யோசிக்கிறது. அப்படி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால், ஒரு தவணை அவருக்கு கிடைக்கும். அவ்வாறு கிடைக்கும் தவணையை பயன்படுத்தி, நாடாளுமன்றத் தேர்தலுக்கு முகம் கொடுக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயாராகி வருகிறது,'' என்கிறார் அவர்.
இந்தோனீஷியாவின் சுகார்னோ, பிலிப்பைன்ஸில் மார்க்கோஸ், ஹபீப் போர்கிபாவை விட சர்வதேச மட்டத்தில் மிகப்பெரிய கள்ளன் மஹிந்த ராஜபக்ஸ என அண்மையில் லண்டனில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் பெரிய ஒரு சொற்பொழிவு நடைபெற்றது. முன்னைய மூவரும் அரச சொத்துக்களைக் களவாடியதைவிட பலமடங்கு இவர் களவாடியதாக உலகில் குறிப்பாக ஐ.இராச்சியத்தின் பல நகரங்களிலும் அவற்றின் ஒலி,ஔிப்பதிவுகள் உலகெங்கிலும் சென்று இவர் பற்றிய முழுமையான பின்னணி உலக மயமாக்கப்பட்டுள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் சாக முன்பு மீண்டும் பிரதமராக வரவேண்டும் என்றால் இந்த நாட்டில் சொனையற்ற பிணங்கள் தான் வாழுகின்றன என முழு உலகமும் பறைசாற்றும். இந்த கேவல நிலைமைக்கு இலங்கை மக்களைத் தள்ளிவிட வேண்டாம் என இந்த நாட்டு மக்கள் அனைவரையும் வினயமாகக் கேட்கின்றோம்.
ReplyDelete