செலவினம் 1657 பில்லியன் - அரசாங்கத்திடம் ஹர்ஷ தொடுத்துள்ள கேள்வி
2023 ஆம் நிதியாண்டுக்கான அரசாங்கத்தின் செலவினம் பாரிய அளவில் அதிகரிக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
அரச நிதி தொடர்பான குழுவின் அறிக்கையை சபையில் முன்வைத்து உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
கடந்த 2022 ஆம் நிதியாண்டுக்கான அரசாங்கத்தின் செலவினம் 6.2 ட்ரில்லியன் ரூபாவாக இருந்த நிலையில், எதிர்வரும் 2023 ஆம் நிதியாண்டுக்கான அரசாங்கத்தின் மொத்த செலவினம், 7.9 ட்ரில்லியன் ரூபாவாக அதிகரிக்கும்.
அதாவது, அரசாங்கத்தின் மொத்த செலவினம் 1657 பில்லியன் ரூபாவினால் அதிகரிக்கும்.
அரசாங்கத்தின் வருமானத்தைக் கொண்டு இந்த செலவுகளையேனும் ஈடுசெய்யமுடியுமா என்று எதிர்வுகூறமுடியாது.
எனவே, அரசாங்கத்தின் செலவினம் அதிகரித்துள்ளமைக்கு நிகராக வருமானத்தினை ஈட்டிக்கொள்வதற்கு அரசாங்கம் எவ்வாறான திட்டங்களை அரசாங்கம் பாதீட்டின் ஊடாக முன்வைக்கும் என எதிர்பார்ப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.
Post a Comment