நாடு திரும்பினார் ரணில், 14 ஆம் திகதி பட்ஜெட்டை சமர்ப்பிக்கிறார்
எகிப்திலிருந்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று -10- நாடு திரும்பினார்.
எகிப்தில் நடைபெற்ற காலநிலை மாற்றம் தொடர்பாள கொப் 27 மாநாட்டில் பங்கேற்க, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அங்கு சென்றிருந்தார்.
இந்நிலையில் இன்று அதிகாலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார். அத்துடன் ஜனாதிபதியின் இந்த விஜயத்தின் போது சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்ட்லினா ஜோர்ஜியேவாவை சந்தித்து இலங்கைக்கான கடனுதவி குறித்து கலந்துரையாடியிருந்தார்.
2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 14 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ள.
Post a Comment