Header Ads



100 சிகரெட்டைவிட ஒரு நுளம்பு சுருள் அபாயமிக்கது


நுளம்பு சுருளை பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை வழங்கும் வகையிலான தகவலொன்று வெளியாகியுள்ளது.


இந்த விடயத்தை மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் துசித சுகதபால குறிப்பிட்டுள்ளார். கண்டியில் நேற்றைய தினம் (02.11.2022) இலங்கைப் பத்திரிகை ஸ்தாபனத்தினால் செயலமர்வொன்று நடத்தப்பட்டிருந்தது.


இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில், உள்ளக வளி மாசடைவினால் உலகம் முழுவதும் வருடாந்தம் 40 இலட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழக்கின்றனர்.


பொலித்தீன் எரித்தல், வீட்டுக்குள் ஊதுபத்திகளை ஏற்றுதல், நுளம்பு சுருள்களை பற்றவைத்தல் போன்ற செயற்பாடுகள் வீட்டின் உட்புறத்திலும் வெளியிலும் வளி மாசினை ஏற்படுத்துகின்றன.


குறிப்பாக 100 சிகரெட்டைப் பற்றவைப்பதன் மூலம் வெளிவரும் புகையில் உள்ள நச்சுத்தன்மையை விட ஒரு நுளம்பு சுருளில் இருந்து வெளிவரும் புகையிலும் நச்சுப் பொருளின் அளவு அதிகம் என சுட்டிக்காட்டியுள்ளார். 


No comments

Powered by Blogger.