யாழ் - ஒஸ்மானியாவைப் பாதுகாப்போம் வேலைத்திட்டத்திற்கு Super 1978 & 1979 குழுமம் நிதியுதவி
ஒஸ்மானியாவைப் பாதுகாப்போம் வேலைத்திட்டத்துக்கு, கல்லூரியின் முன்னாள் மாணவர்களாகிய சூப்பர் 1978, 1979 குழுமத்தைச் சேர்ந்தவர்கள் 63,500 ரூபாவை தமது குழுவினரிடமிருந்து சேகரித்து ஒஸ்மானியாவைப் பாதுகாப்போம் குழுவிடம் ஒப்படைத்துள்ளனர்.
இந்நிகழ்வு 11-10-2022 அன்று நீர்கொழும்பு - பெரியமுல்லையில் இடம்பெற்றது.
ஒஸ்மானியாவைப் பாதுகாப்போம் குழுவினரிடம் குறித்த நிதி 1978, 1979 குழுமம் சார்பில் பஸ்லின், ரில்வான் மற்றும் இஹ்திஸாம் ஆகியோரினால் கையளிக்கப்பட்டது.
1990 ஆம் ஒஸ்மானியாக் கல்லூரியில் இறுதியாக ஆறாம் ஆண்டில் சேர்ந்தவர்கள்தான் இந்த குழுவினர். 1990 ஜூன் 11 ஆம் திகதி யுத்தம் ஆரம்பமாகும் வரை சுமார் ஆறு மாதங்களே ஒஸ்மானியாவில் கற்றிருந்தாலும், கல்லூரி ஆபத்தில் இருக்கின்றது என்பதை அறிந்தவுடன், தாமும் இந்த முயற்சிக்கு பங்களிப்பு வழங்கவேண்டும் என்ற எண்ணத்துடன், தமது குழுமத்தினருடன் தொடர்பு கொண்டு நிதி சேகரித்து வந்தனர்.
Post a Comment