"கோட்டாபய சார்பில் இனிமேல், முன்னிற்க போவதில்லை"
காலநிலை மாற்றத்தை தணிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்காததன் காரணமாக அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக குற்றம் சுமத்தி அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த மனுவில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சார்பில் இனிமேல் முன்னிற்க போவதில்லை என சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
சுற்றாடல் நீதி மையத்தினால் தாக்கல் செய்யப்பட்ட குறித்த மனு விசாரணைக்கு அழைக்கப்பட்ட போது, சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் பரிந்த ரணசிங்க, நீதிமன்றத்திற்கு இந்த அறிவித்தலை தெரிவித்துள்ளார்.
யசந்த கொன்டகொட, ஏ.எச்.எம். நவாஸ் மற்றும் ஜனக் டி சில்வா ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த வெட்கம் கெட்ட அரச நிறுவனங்கள் செய்ய வேண்டிய அத்தனையைுயம் செய்து விட்டு மரணப்படுக்கையில் உள்ள கோதபாவை கைவிட்டு விட்டார்களாம். இதே வசனத்தை சனநாயக விரோதச் செயல்களைச் செய்து சனநாயக உரிமைகளைக் கோரும் எந்தவித குற்றங்களையும் செய்யாத இளைஞர்களையும் மத குருக்களையும் சிறையில் அடைத்துவைத்திருக்கும் ரணிலின் சட்டவிரோதச் செயல்களுக்கு ஆதரவளிப்பதில்லை என தைரியமிருந்தால் கூறுங்கள் பார்க்கலாம் என இந்த அரச நிறுவன அதிகாரிகளிடம் பொதுமக்கள் கேட்கின்றார்கள். பதில்கிடைக்குமா?
ReplyDelete