பேராசிரியர் சரித்தவிடமிருந்து அலி சப்ரிக்கு பதில்
ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அரசாங்கம் மற்றும் அமைச்சரவை பொருளாதாரத்தின் யதார்த்தம் தொடர்பிலான புரிதல் இன்றி இருந்ததாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி நேற்று (14) நிகழ்வொன்றில் தெரிவித்த கருத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித்த ஹேரத் இன்று -15- பதிலளித்துள்ளார்.
இலங்கையின் அந்நியச் செலாவணி நெருக்கடி தொடர்பில் தாம் இரண்டு தடவைகள் அமைச்சரவையில் அறிவித்திருந்ததாக பேராசிரியர் சரித்த ஹேரத் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பில் அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்ட போதிலும் தீர்வினைப் பெற்றுக்கொடுக்க தவறியுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.
2019 ஆம் ஆண்டு முதல் அமைச்சர் அலி சப்ரி அமைச்சரவையை பிரதிநிதித்துவப்படுத்தி வருவதையும் பேராசிரியர் சரித்த ஹேரத் நினைவுபடுத்தியுள்ளார்.
Post a Comment