பதவி விலகப் போகிறாரா முஜிபுர் ரகுமான்..? அடுத்த இடத்தில் பௌசி
கொழும்பு மாநகர முதல்வர் பதவிக்கு போட்டியிடுவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் நிலையில் இருந்து விலகுவது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமான் இன்று -26- தெரிவித்துள்ளார்.
முஜிபுர் ரஹ்மான் மாநகர முதல்வர் பதவிக்கு போட்டியிடுவது குறித்து அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஜயமஹா தகவலை வெளியிட்டிருந்தார்
எனினும், இந்த விடயம் தொடர்பில் இறுதித் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை. ரகுமான் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பதவி விலகினால், பட்டியலில் அடுத்த இடத்தில் இருப்பதால் அந்த வெற்றிடத்தை நிரப்புவது ஏ.எச்.எம்.பௌசியாக இருப்பார் என்றும் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
Post a Comment