Header Ads



நான் மாசி ஒரு துண்டு கூட இப்போது சாப்பிடுவதில்லை, ஊட்டச்சத்து குறைபாட்டுடன் உள்ளேன் - நாமல் ராஜபக்ஷவும் போஷாக்கின்மையால் பாதிப்பு

தன்னைப் போலவே பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவும் போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.


ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே எம்.பி. இதனை நேற்று (03) கூறினார்.


கடுமையான பட்டினியால் வாடும் நாடுகளில் ஒன்றாக இலங்கையும் மாறிவிட்டதாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் தொடர்பில் எம்.பி.யிடம் ஊடகவியலாளர் கருத்து கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


அங்கு மேலும் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்,


' நாட்டில் இன்று முட்டை விலை அதிகரித்துள்ளது, பால் விலை அதிகரித்துள்ளது, மீன், இறைச்சி விலையும் உச்சம் தொட்டுள்ளது. நான் மாசி ஒரு துண்டு கூட இப்போது சாப்பிடுவதில்லை. நான் இப்போது ஊட்டச்சத்து குறைபாட்டுடன் உள்ளேன். 


நாமல் ராஜபக்ஷவும் போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரும் ஒரு துண்டு மாசி கூட இப்போது சாப்பிடுவதில்லை. அதேபோல பொலன்னறுவையில் உள்ள பளுதூக்கும் வீரர் ஒருவர் கூட இப்போது மரக்கறிகளை மத்திரமே  சாப்பிடுகிறார். அவருக்கும் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளது' என்றார்.

1 comment:

  1. மாசி தின்ன பல்லு வேணாமா ?

    ReplyDelete

Powered by Blogger.