Header Ads



டொலர் பற்றாக்குறையை ஈடுசெய்ய, சஜித் பிரேமதாஸ கூறும் ஐடியா


மருந்துப் பற்றாக்குறைக்கு முக்கியக் காரணம் டொலர் தட்டுப்பாடும், இறக்குமதி முறையின் பிரச்சினையும் எனவும், பண்டோரா பத்திரங்களில் குறிப்பிட்டுள்ளபடி நாடு இழந்த பில்லியன் கணக்கான டொலர்களை கொண்டு வருவதே இந்த டொலர் பிரச்சினையைத் தீர்க்க சிறந்த தீர்வாகும் எனவும், அவ்வாறு இல்லாமல் சீனா, இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நாடுகளிடமிருந்து கடன் பெறவதல்ல எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.


இதன் மூலம் மருந்து தட்டுப்பாடு மட்டுமின்றி, நாட்டின் டொலர் நெருக்கடிக்கு தீர்வு கிட்டும் எனவும், இது தனிநபர்களை குறிவைப்பதன் மூலம் அன்றி, மாறாக தவறு செய்த மற்றும் திருடிய, கொள்ளையடித்த, அரச வளங்கள் மற்றும் அரச சொத்துக்களை பெற்றுக்கொள்வதை இலக்காக் கொண்டு மேற்கொள்ள வேண்டும் எனவும், இந்த பணமும் சொத்துக்களும் 220 இலட்சம் பொதுமக்களின் சொத்து எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


ஆனால் தற்போதைய அரசாங்கம் அந்த வழியைப் பின்பற்றுமா என்பது ஒரு பிரச்சினைக்குரிய விடயம் என்றாலும், எதிர்காலத்தில் ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ், திருடப்பட்ட பணம் அனைத்தும் தெளிவான, வெளிப்படத்தன்மையுடனும் பொறுப்புடனும் தொடர்புடைய அனைத்து வளங்களும் மீட்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.


மருந்தக உரிமையாளர்கள் சங்கம், மருந்தக உதவியாளர் சங்கம், அவர்களின் தொழில்முயற்சியாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் பலர் கலந்து கொண்ட தேசிய மக்கள் பேரவை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் நேற்றைய தினம் (25) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் கூடியது.


நாட்டில் தற்போது நிலவும் மருந்துப் பற்றாக்குறையைத் தீர்க்க எதிர்க்கட்சியில் இருந்தும் பெரிய வேலைத்திட்டமொன்று செயல்படுத்தப்படுகிறது எனவும், இதன் கீழ் இதுவரை 165 மில்லியன் பெறுமதியான வைத்தியசாலை உபகரணங்கள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


மூச்சுத் திட்டத்தின் கீழ் சுகாதார துறைக்கு இவ்வாறு சேவைகள் மோற்கொள்ளும் போது பிரபஞ்சம் வேலைத்திட்டத்தின் கீழ் நாட்டின் கல்வித் துறைக்கு பெரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன எனவும், எனவே,அவர்களும் ஒன்றே, இவர்களும் ஒன்றே என்ற கருத்தோட்டத்திலிருந்து தான் உள்ளிட்ட எதிர்க்கட்சியும் வேறுபட்டது எனவும் அவர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.