தென்கொரியாவில் இலங்கையர் வபாத், அண்மையில் திருமணம் செய்திருந்தவர்
தென் கொரியாவில் இடம்பெற்ற ஹெலோவீன் கொண்டாட்டத்தில் உயிரிழந்தவர்களில் இலங்கையர் ஒருவரும் அடங்குவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
கண்டி பகுதியை சேர்ந்த 27 வயதான முஹமட் ஜினாத் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பரிதாபமாக உயிரிழந்த இளைஞன் அண்மையில் திருமணம் செய்து கொண்டவர் என தெரியவந்துள்ளது.
தென் கொரியாவின் தலைநகர் சியோலில் இடம்பெற்ற இந்த அனர்த்தம் காரணமாக இதுவரை 160 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment