பிரபாகரன் செய்ததைப் போலவே பெற்றோர்களும் செய்கிறார்கள் - ஜனாதிபதி ரணில்
பொதுப் போராட்டங்களில் சிறுவர்கள் பங்கேற்பது தடை செய்யப்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டின் சட்டங்கள் குழந்தைகளைப் பாதுகாக்க முயல்கின்றன என்றும், போரின் போது மறைந்த விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் செய்ததைப் போலவே பெற்றோர்கள் பழிவாங்கும் நோக்கில் குழந்தைகளை போராட்டங்களுக்கு அழைத்துச் செல்கிறார்கள் என்றார்.
குழந்தைகள் போராட்டங்களுக்கு கொண்டு வரப்பட்டால், இதுபோன்ற செயல்களைத் தடுக்க பொலிஸாருக்கு அறிவிக்க வேண்டும், இது பல்கலைக்கழக மாணவர்களும் தங்கள் போராட்டங்களுக்கு குழந்தைகளை அழைத்து வரக்கூடும்,” எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இலங்கையின் அரசியலமைப்பின் சில பகுதிகளை வாசித்த ஜனாதிபதி, “குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் உடல், மன, தார்மீக, மத மற்றும் சமூக மற்றும் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் அவர்களின் நலன்களை அரசாங்கம் விசேட கவனத்துடன் ஊக்குவிக்கும்.
இது தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையை பெற்றுக்கொள்ள வேண்டும், இல்லை என்றால் அது பிரச்சினையை ஏற்படுத்தும். என ஜனாதிபதி விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
சிறுவர் உரிமைகள் சட்டமொன்றை கொண்டு வருவதில் தாமதம் தொடர்பில் கேள்வி எழுப்பிய ஜனாதிபதி இலங்கையில் சிறுவர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகங்களை தடுக்கும் வகையில் பொதுப் போராட்டங்களில் சிறுவர்களை தடை செய்வதுடன் கடுமையான சட்டங்களும் கொண்டு வரப்பட வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சிறுவர்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாப்பு தொடர்பான விசேட கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
Post a Comment