Header Ads



நழுவிச் சென்றது இலங்கை


உக்ரைனில் புகுந்து கடந்த 8 மாதங்களாக போர் நடத்தி வரும் ரஷியப் படைகள் கைப்பற்றிய டானட்ஸ்க், லூகன்ஸ்க், ஸ்பெரெசியா, கெர்சன் ஆகிய 4 பிராந்தியங்கள் ரஷ்யாவுடன் இணைக்கப்பட்டதாக அந்நாட்டு ஜனாதிபதி புதின் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.


ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு ஐ.நா தலைவர் அன்டோனியோ குட்டரெஸ் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஐ.நா.பொதுச் சபையில் நேற்று ரஷ்யாவிற்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் கொண்டு வரப்பட்டது.


இதன் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. தீர்மானத்திற்கு ஆதரவாக 143 நாடுகளும் எதிராக 5 நாடுகளும் வாக்களித்தன. இலங்கை உட்பட 35 நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணித்தன.

1 comment:

  1. ஐ.நா.சபையின் வாக்களிப்பைப் புறக்கணிப்பதன் மூலம் ரஷ்யா தலைவர் பூட்டினின் காலில் விழுந்து பிச்சை கேட்க வாய்ப்பாகப் பயன்படுத்தலாம் என அரசாங்க அதிகாரிகள் நினைத்தால் அது மற்றுமொரு பகற்கனவு. ஊரிலும் வௌியிலும் மடத்தனத்தை இராஜதந்திரமாக காட்ட முயற்சி செய்யும் இந்த அரசாங்கத்தின் மீஹரக் நிலைமைக்கு என்ன சொல்வதென்றே தெரியாமல் தவிர்க்கின்றோம். இறுதியில் அந்த மீஹரக் நடவடிக்கைகளின் பாரதூரமான பின்விளைவுகளை எமது எதிர்காலப் பரம்பரையினர் அனுபவிக்கும் போது அவர்கள் திட்டும் திட்டுதல்கள் நிச்சியம் அந்த நபர்களின் கல்லறையில் பயங்கர சத்தங்களாக இருக்கும். அந்த சத்தங்களை மனிதர்களுக்கு கேட்காத வயைில் கடவுள் அ்ருள்பாலித்துள்ளார். அந்த சத்தங்கள் மனிதர்களுக்கு கேட்டால் அவர்கள் இருக்கும் இடத்திலேயே மயங்கிவிழுவார்கள். முழு உலகமும் அதனால் மனித உடல்கள் நிறைந்த மயானங்களாக மாறிவிடும்,அத்தகைய பயங்கரத்திலிருந்து காப்பாற்றிய அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும் உரித்தாகட்டும்.

    ReplyDelete

Powered by Blogger.