இப்படியும் நடந்தது - கண்கலங்க வைத்ததுடன் பெரும் ஆச்சரியம்
- கனகராசா சரவணன் -
மட்டக்களப்பு - தாளங்குடா பிரதேசத்தில் குரங்கு ஒன்று தனது ஏஜமான் உயிரிழந்ததையடுத்து அவரின் சடலத்தில் ஏறி அவரை கட்டியணைத்து அழுது புலம்பியதுடன், அவரின் இறுதிக் கிரிகை நடந்த மயானத்திற்கு சென்று அவருக்கு அஞ்சலி செலுத்திய சம்பவம் அனைவரையும் கண்கலங்க வைத்ததுடன் பெரும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது
தாளங்குடா பிரதேசத்தினைச் சேர்ந்த 56 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையான பீதாம்பரம் ராஜன் காட்டில் இருந்து வந்த குரங்கு ஒன்றிற்கு பழங்களை வழங்கிவந்துள்ளார்.
குறித்த குரங்கும் தினமும் அவரது வீட்டிற்கு வந்ததும் அவர் அதற்கு பிஸ்கற்களை வழங்குவதுடன் அவரின் வலது குறைந்த பிள்ளையை அறையில் இருந்து குரங்கு அழைத்து வந்து அந்த பிள்ளையுடன் பிஸ்கற் சாப்பிடுவது வழக்கம்.
இந்த நிலையில் திங்கட்கிழமை(17) இரவு சுகயீன் காரணமாக அவர் உயிரிழந்ததையடுத்து அவருடைய வீட்டுக்கு வந்த குரங்கு அவர் சடலமாக படுத்திருப்பதை பார்த்து அவரின் பக்கம் சென்று அவருக்கு மூச்சு உள்ளதா என பார்த்து அவரின் கழுத்து சட்டையை பிடித்து இழுத்து கண்ணீர் விட்டு அழுததுடன் அவரின் காலை தொட்டு கும்பிட்டு அவரின் அருகில் தொடர்ந்து அமர்ந்தது.
அதேவேளை சடலத்தை புதைப்பதற்காக மயானத்துக்கு கொண்டு சென்ற நிலையில் குரங்கு அங்கும் சென்று அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளது.
Post a Comment