தொலைபேசியில் உரையாடியபடி சென்ற யுவதியின் உயிரைக் குடித்த ரயில்
கையடக்க தொலைபேசி ஒன்றில் வேறு ஒருவருடன் உரையாடிக்கொண்டு தொடருந்து பாதையில் நடந்துச் சென்ற யுவதி தொடருந்தில் மோதுண்டு உயிரிழந்துள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாபலகம பிரதேசத்தை சேர்ந்த 28 வயதான யுவதியே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். இந்த யுவதி தொடருந்து பாதையில் தொலைபேசியில் பேசியபடி மாகல்லேயில் உள்ள சகோதரியின் வீட்டுக்கு நடந்துச் சென்றுள்ளார்.
அப்போது கொழும்பில் இருந்து பெலியத்த நோக்கி சென்ற ருஹூணு குமாரி தொடருந்தில் மோதுண்டு படுகாயமடைந்த நிலையில் காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட யுவதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Post a Comment