Header Ads



இலங்கையில் இளம் பிக்குமாருக்கு எயிட்ஸ்


இலங்கையில் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள எச்.ஐ.வி. வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களில் இளம் பௌத்த பிக்குமாரும் அடங்குவதாக பாலியல் நோய்கள் மற்றும் எயிட்ஸ் தடுப்பு தொடர்பான தேசிய நிகழ்ச்சித்திட்டம் தெரிவித்துள்ளது.


மேலும் பாடசாலை மாணவர்கள் மாத்திரமல்லாது பல்கலைக்கழக மாணவர்களும் குறிப்பிடத்தக்களவில் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இளம் வயதினரே இவ்வாறு எச்.ஐ.வி தொற்று உள்ளாகியுள்ளனர்.


18 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்களே வேகமாக எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளாகி வருவதாக பாலியல் நோய்கள் மற்றும் எயிட்ஸ் தடுப்பு தொடர்பான தேசிய நிகழ்ச்சித்திட்டம் தெரிவித்துள்ளது.


இலங்கையில் எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை கடந்த வருடத்தை விட இந்த வருடம் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது எனவும் நிகழ்ச்சித்திட்டம் கூறியுள்ளது.

1 comment:

  1. இளம் பிக்குமார்கள் பன்ஸலயில் என்ன செய்கின்றார்கள். இந்த சமூகம் அந்த இளம் பிக்குமார்களிடம் என்ன எதிர்பார்க்கின்றது. அவர்களைப்பயிற்றுவிக்கும் மதபீடங்கள் என்ன குறிக்கோள்களுடன் இயங்குகின்றன என்பதை அரசாங்கமும் பௌத்த மதபீடங்களும் இந்த நாட்டு்ப பொதுமக்களுக்கு அறிவிக்க வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.