சதிக்காரர்கள் நாங்கள் அல்ல, கோட்டாபய அரசாங்கத்தை கவிழ்த்த உண்மையான சதிகாரர் பசில்தான் - ஜோன்ஸ்டனுக்கு பதிலடி
கடந்த அரசாங்கத்தை கவிழ்க்கும் சதியின் பின்னணியில் விமல் மற்றும் கம்மன்பில இருந்ததாக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ முன்வைத்த குற்றச்சாட்டிற்கு நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச பதிலளித்துள்ளார்.
கோட்டாபய அரசாங்கத்தை கவிழ்த்த உண்மையான சதிகாரர் பசில் ராஜபக்ஷ என்று அவர் தெரிவித்துள்ளார்.
விமல் மற்றும் கம்மன்பிலவை அமைச்சரவையில் இருந்து நீக்கும் வரை தாம் அமைச்சரவையில் இணையப் போவதில்லை என பசில் ராஜபக்ஷ அப்போது அதிபர் கோட்டாபயவிடம் தெரிவித்ததாக அவர் கூறினார்.
பசில் ராஜபக்ஷவை அவரது விருப்பப்படி செல்ல வைத்ததாலேயே நாடு இன்று இந்த நிலைக்கு வந்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment