கொழும்பில் பால் மா பொதிகளை திருடிய வெளிநாட்டவருக்கு நீதிமன்றம் போட்ட உத்தரவு
பதினைந்தாயிரம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான 13 பால்மா பொதிகளை திருடிய வெளிநாட்டவருக்கு 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 6 மாத கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அத்துடன், அவருக்கு 1500 ரூபா அபராதம் விதித்து கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவிட்டார்.
கொழும்பில் உள்ள தனியார் வர்த்தக வளாகத்தில் பால் மா பொதிகளை திருடிய குற்றச்சாட்டில் ஐக்கிய அரபு இராச்சிய பிரஜையான குறித்த சந்தேகநபர் கொம்பனித்தெரு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில், அவருக்கு எதிரான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதையடுத்து நீதிவான் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
ஐக்கிய அரபு இராச்சிய பிரஜை ஒருவர் 15000 ரூபா பெறுமதியான பால்மாவைத்திருடியிருப்பார் என பொதுமக்களால் கற்பனையும் செய்ய முடியாது. அவர் அல்லது அவள் இங்கு விஜயம் செய்வதற்கு அதுபோல் குறைந்தது 100 மடங்கு பணமாவது வைத்திருக்க வேண்டும். அந்த நபர் ஏன் இந்தக் களவைச் செய்தார் என்ற காரணத்தை உண்மையை மட்டும் வாசகர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். செய்தி ஒன்று கிடைத்தது என்பதற்காக பிரசுரிக்க வேண்டாம். சரியாக அவற்றை ஊர்ஜிதம் செய்து அந்த களவை ஏன் செய்ய வேண்டும் என்ற காரணத்துடன் தெரிவித்தால் அது மற்றவர்களுக்குப் பயனுடையதாக அமையும்.
ReplyDelete