ஜே.வி.பி. மீது நாமல் பாய்ச்சல், ரணிலுக்கு சிறந்த ஆதரவை வழங்கவுள்ளதாக தெரிவிப்பு
மக்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்துவிட்ட கடந்தகால மனோநிலையிலேயே மக்கள் விடுதலை முன்னணி தற்போதும் இருப்பதாக பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணியில் ஒரளவு மாற்றம் ஏற்பட்டிருக்கும் என தாம் எண்ணியிருந்த போதிலும் கடந்த மே மாதம் 9 ஆம் திகதி அவர்கள் செயற்பட்ட விதமானது 88 மற்றும் 89 ஆம் ஆண்டு காலகட்டங்களின் அவர்களின் நடத்தையை மீண்டும் பிரதிபலிக்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணி, தமது தடிகள், வாள்கள், கத்திகள் மற்றும் தீப்பந்தங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, நாட்டை மீளக் கட்டியெழுப்புவதற்காக தொழிலாளர்களுடன் இணைந்து கொண்டதாக தாம் எண்ணியிருந்ததாக நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
நாட்டை மீளக் கட்டியெழுப்புவதில் ஜே.வி.பி.யும் இணைந்துகொள்வதற்கான கொள்கைத் தீர்மானத்திற்கு வரும் என தாம் எண்ணிய போதிலும் அவ்வாறு தெரியவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
தற்போதைய அரசாங்கம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த நாமல் ராஜபக்ச, நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக தற்போதைய அதிபர் குறிப்பிட்ட சில நடைமுறையை நடைமுறைப்படுத்தி வருவதாக தெரிவித்தார்.
மேலும், சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் கொள்கைகளுக்கும் தனது சொந்தக் கொள்கைகளுக்கும் ஒரு மையப் புள்ளியைக் கண்டறிய அதிபர் முயற்சிப்பதாகவும் நாமல் ராஜபக்ச கூறியுள்ளார்.
ஆகவே அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கு சிறந்த ஆதரவை வழங்குவோம் எனவும், அரசியல் கொள்கை என்று வரும்போது நாம் தனித்தனியே நின்று செயற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் அதிபரும் தாமும் நாட்டில் உள்ள மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு இரு தரப்பினருக்கும் இடையில் கொள்கைகளை கொண்டு வர முயற்சிக்கிறோம் எனவும் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
பஞ்சமா பாதகங்களைச் சாதாரணமாக செய்துவரும்,நாட்டைச் சூறையாடுவதையும், மங்கொள்ளையடிப்பதையும் ஒரே நோக்கமாகக் கொண்டவனுக்கு அதற்கு எதிராகச் செயற்படுபவர்கள், மற்றொரு மோசடிக் காரர்களாகத்தான் தென்படுவார்கள். அதேநேரம் இறைநிராகரிப்பாளர்களின் நடத்தை பற்றிக்குறிப்பிடும் அல்குர்ஆன் ஸூரா கஹ்பில் ' " ٱلَّذِينَ ضَلَّ سَعْيُهُمْ فِى ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا وَهُمْ يَحْسَبُونَ أَنَّهُمْ يُحْسِنُونَ صُنْعًا " இவ்வுலக வாழ்வில் யாருடைய முயற்சி பயனற்றுப் போய்விட்டதோ அவர்கள் மெய்யாகவே அழகான காரியங்களையே தாம் செய்வதாக எண்ணிக் கொண்டிருக்கிறார்களோ அவர்கள் தான் உண்மையான நஷ்டவாளிகள். இந்த அல்குர்ஆன் வசனம் அல்குர்ஆன் இறங்கி 1400 வருடங்கள் சென்றபின்னரும் இந்த இறைநிராகரிப்பாளர்களுக்கு எவ்வளவு பொறுத்தமாக இருக்கின்றது என்பதை நாம் அனைவரும் பலமுறை சிந்தித்துச் செயற்படுவோம்.
ReplyDelete