Header Ads



அநுராதாபுரம் மாவட்ட முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனத்தின் அனுதாபச் செய்தி


மறைந்த அநுராதபுர அட்டமஸ்தானாதிபதி வடமத்திய மாகாண பிரதான சங்கநாயக்க தேரர்,வடக்கு மத்திய பிரிவிற்கான பிரதம சங்கநாயக்க தேரர் கலாநிதி பல்லேகம சிறினிவாசவின் மறைவையிட்டு அநுராதபுரம் மாவட்ட முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனம் தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

முன்னிலை பௌத்த தேரர்களில் ஒருவரான மறைந்த தேரர்,தனது துறவி வாழ்வை அர்த்தபுஷ்டியாக கழித்ததோடு,அன்னார் வட மத்திய,வடக்கு மத்திய பிரிவு மக்களுக்கு மட்டுமன்றி இந்நாட்டில் வாழும் அனைத்து பௌத்த மக்களினதும் சாசன மேம்பாட்டிற்கும் பொது நலனுக்காகவும் அளப்பறிய சேவையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


பௌத்த சாசன போதனை,கல்வி மட்டுமல்லாது நாட்டின் பொதுக்கல்வி சார்ந்த வசதி வாய்ப்புகளை அநுராதபுர மாவட்ட தூரப் பிரதேச பாடசாலைகளுக்கு கொண்டு சேர்ப்பதில் அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய அவர்,பருவகால வரட்சி,குடிநீர் பிரச்சினை,மாவட்டத்தின் காட்டு யானை-மனித மோதல் பிரச்சினையால் ஏற்படும் பாதிப்புகளுக்கு தீர்வுகளையும் நிவாரணங்களையும் வழங்குதல்,


சட்ட விரோத காடழிப்பு,சட்ட விரோத ஆக்கிரமிப்புகளை தடுத்தல் உள்ளிட்ட சமூக விவகாரங்களில் கூடிய கரிசனையுடன் செயற்பட்ட தேரராவார்.


பல தசாப்த காலமாக பௌத்த சாசனத்தின் வளர்ச்சிக்காகவும் மேம்பாட்டுக்காகவும் அவர் வழங்கிய பங்களிப்பு போற்றத்தக்கது என்பதோடு ஈடு செய்ய முடியாத ஓர் பேரிழப்பாகும்.


தேரரின் ஆத்மா மோட்சம் கிட்ட வேண்டுமென அநுராதாபுரம் மாவட்ட முஸ்லிம் லீக் வாலிப சம்மேளனம் பிரார்த்திக்கிறது.


ஏ.ஜீ.நளீர் அஹமட்

தலைவர்

அநுராதாபுரம் மாவட்ட முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனம்.

No comments

Powered by Blogger.