Header Ads



ஜனாதிபதிக்கு எச்சரிக்கை விடுத்த பொதுஜன பெரமுன - பட்ஜட் தோற்கடிக்கப்படுமா..?


 உடனடியாக அமைச்சரவையை நியமிக்காவிட்டால், வரவு செலவுத்திட்டம் தோல்வியடைய கூடும் பொதுஜன பெரமுனவை சேர்ந்த முக்கியஸ்தர்கள் சிலர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை எச்சரித்துள்ளதாக தெரியவருகிறது.


இதற்கு பதிலளித்துள்ள ஜனாதிபதி, தேவையானால், வரவு செலவுத்திட்டத்தை தோற்கடிக்குமாறும் தனக்கு அவசியமான நேரத்திலேயே அமைச்சரவை நியமிக்கப்படும் கூறியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


உடனடியாக அமைச்சரவையை நியமிக்க வேண்டும்

வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்படும் என எச்சரித்த மொட்டுக்கட்சியினர்-ஜனாதிபதி வழங்கிய அதிரடியான பதில் | Slpp Warns Of Budget Defeat Presidents Response


22வது அரசியலமைப்புத் திருத்தச்சட்டத்தை தோற்கடிக்க இந்த குழுவினர் செயற்பட்ட விதத்தை தாம் பார்த்ததாக கூறியுள்ள ஜனாதிபதி, இவ்வாறு செயற்பட முடியாது எனவும் வரவு செலவுத்திட்டத்தை தோற்கடித்து நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளையும் இழந்து விடுமாறும் தெரிவித்துள்ளார்.


22வது அரசியலமைப்புத் திருத்தச்சட்டம் மீதான வாக்கெடுப்பை பகிஷ்கரித்த, அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பதவிகளை பெற முயற்சித்த வந்த, மக்கள் மத்தியில் மிகவும் அதிருப்திக்கு உள்ளாகி இருக்கும் பொதுஜன பெரமுனவை சேர்ந்த முக்கியஸ்தர்கள் சிலர் இரண்டு தினங்களுக்கு முன்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளனர்.


ஜனாதிபதியை சந்தித்த அவர்கள், உடனடியாக அமைச்சரவையை நியமிக்குமாறு மீண்டும் வலியுறுத்தியுள்ளனர். அமைச்சரவை நியமிக்கப்படாது போனால், அடுத்த சில தினங்களில் தாக்கல் செய்யப்படும் வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்படும் வாய்ப்புள்ளதாக அவர்கள் ஜனாதிபதிக்கு எச்சரித்துள்ளனர்.



வரவு செலவுத்திட்டத்தை தோற்கடிக்க எதிர்க்கட்சியினர் முழுமையாக ஒருங்கிணைந்துள்ளனர் என்பதை நினைவூட்டுவதாகவும் துரிதமாக அமைச்சரவையை நியமித்து, பரிந்துரைக்கப்பட்டுள்ள ரோஹித்த அபேகுணவர்தன, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ,


நாமல் ராஜபக்ச உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சு பதவிகளை வழங்கி, நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருமாறும் அவர்கள் ஜனாதிபதியிடம் கூறியுள்ளனர்.


தேர்தல் நடத்தப்படுமாயின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்க போவது நானில்லை- ஜனாதிபதி 

ரணில் விக்ரமசிங்க-Ranil Wickramsinghe


இதற்கு பதிலளித்துள்ள ஜனாதிபதி, அந்த அணிக்கு தேவையானால்,வரவு செலவுத்திட்டத்தை தோற்கடிக்குமாறு கூறியுள்ளார். அத்துடன் அமைச்சரவையை நியமிக்க இது நேரமல்ல எனவும் அதனை விட பெரிய பிரச்சினைகளை தீர்க்க வேண்டியுள்ளதாகவும் மக்கள் மிகவும் கஷ்டங்களுக்கு உள்ளாகி இருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்ப்பது முக்கியமானது எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.


மேலும் அவசியமான நேரத்தில் அமைச்சரவையை நியமிப்பதாக தெரிவித்துள்ள ஜனாதிபதி, தனக்கு தேவையான நேரத்தில் அமைச்சரவை நியமிக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.



விரும்பும் எவருக்கும் வரவு செலவுத்திட்டத்தை தோற்கடிக்க சந்தர்ப்பம் இருப்பதாக கூறியுள்ள ஜனாதிபதி, நாட்டின் தலைவர் என்ற முறையில் நாட்டை பற்றி சிந்தித்தே தீர்மானங்களை எடுப்பதாகவும் அடுத்து ஒரு தேர்தலை நடத்தினாலும் தனக்கு பிரச்சினையில்லை எனவும் தெரிவித்துள்ளார்.


தேர்தல் ஒன்று நடைபெறுமாயின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்க போவது தான் அல்ல எனவும் ஜனாதிபதி இதன் போது குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.