திலினியை விடுவிக்க அழுத்தம் கொடுத்தாரா நாமல்..? அரசியல்வாதிகளுக்கு எப்படி பணம் கிடைத்தது...??
திலினி பிரியமாலி என்ற பெண்ணின் நிதி கொடுக்கல், வாங்கல்களுடன் தனக்கோ தனது குடும்பத்தினருக்கோ எவ்வித தொடர்பும் இல்லை என்பதை பொறுப்புடன் கூறுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் சம்பந்தமாக விசேட உரையாற்றை ஆற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
சந்தேக நபரான பெண்ணையும் இன்னுமொரு நபரை விடுதலை செய்யுமாறு நான் தொலைபேசியில் தொடர்புக்கொண்டு அழுத்தம் கொடுத்ததாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி நாடாளுமன்றத்தில் கூறினார்.
நான் அந்த குற்றச்சாட்டை முற்றாக நிராகரிக்கின்றேன். நான் அந்த சம்பவத்துடன் எந்த விதத்திலும் சம்பந்தப்படவில்லை என்பதால், பொலிஸூக்கு செல்ல அவசியமில்லை.
என் மீது எனது குடும்பத்தினர் மீது சேறுபூசுவதை நிறுத்தி விட்டு, பணச் சலவை பற்றி பெரிதாக பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வர்த்தகங்களில் முதலீடு செய்ய அரசியல்வாதிகளுக்கு எப்படி பெருந்தொகை பணம் கிடைத்தது என்பதை தேட வேண்டும் எனவும் நாமல் ராஜபக்ச கூறியுள்ளார்.
சமிந்த விஜேசிறியின் குற்றச்சாட்டு சம்பந்தமாக நாடாளுமன்ற சிறப்புரிமை குழுவில் முறைப்பாடு செய்ய உள்ளதாகவும் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். TW
Post a Comment