Header Ads



சுவிஸ், நோர்வே குடியுரிமை பெற்றவர்கள் பாராளுமன்றத்தில் உள்ளனர் - எந்த நாடும் காட்டித்தராது


நாடாளுமன்றத்தில் 10க்கும் மேற்பட்ட இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள் இருக்கலாம், ஆனால் அவர்கள் யார் என்பதை அறியும் முறைமை இல்லை என பிவித்துரு ஹெல உறும்யவின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.


2015ஆம் ஆண்டு இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவதற்குத் தடை விதிக்கப்பட்ட போது, ​​நோர்வே மற்றும் கனடாவில் இரட்டைக் குடியுரிமை பெற்ற 10 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்களும், சுவிஸ் குடியுரிமை பெற்ற சுதந்திரக்கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ஒருவரும் இருந்ததாக இலங்கையின் கோடீஸ்வர வர்த்தகர் ஒருவர் தம்மிடம் கூறியதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டார்.


இணையத்தளங்கள் மற்றும் அந்த நாடுகளில் இருந்து அவர்களைப் பற்றிய தகவல்களைக் கண்டறிய முயற்சித்தாலும், எந்தவொரு நாடும் தனது பிரஜைகள் பற்றிய தகவல்களை மூன்றாம் தரப்பினருக்கு வெளியிடுவதில்லை அல்லது வழங்குவதில்லை என்றும் கம்மன்பில கூறினார்.

No comments

Powered by Blogger.