Header Ads



ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த பயணித்த, சொகுசு ஜீப் மோதியதில் ஒருவர் படுகாயம்


இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த பயணித்த சொகுசு ஜீப் மற்றுமொரு வாகனத்துடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.


புத்தளம் நகருக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன் மற்றைய வாகனத்தில் பயணித்தவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


விபத்துக்குள்ளானவர் புத்தளம் திலடியா பிரதேசத்தில் வசிக்கும் 45 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தை என எமது செய்தியாளர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.