ராஜாங்க அமைச்சரின், தடாலடி பேச்சு
பதுளை புஹாலே பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
சுதந்திரக்கட்சியின் எமது பொதுச் செயலாளர் என்ன செய்தார். அவரை தெரிவு செய்வோம், இவரை தெரிவு செய்வோம் என ஊடகங்களுக்கு செவ்விகளை வழங்கினார்.
ஜனாதிபதியை தெரிவு செய்யும் நேரத்தில் என்ன நடந்தது?. அவர்கள் சஜித் பக்கம் சென்றனர். நாங்கள் ரணில் பக்கம் நின்றுக்கொண்டோம். என்னை விட சிரேஷ்ட தலைவர் நிமல் சிறிபால டி சில்வா இங்கும் இருக்கின்றார்.
அவருக்கு பின்னால் இருந்த தலைவர் (டிலான் பெரேரா)பொதுஜன பெரமுனவின் ஊடகப் பேச்சாளராகவும் இருந்தார்.பொதுஜன பெரமுன அரசாங்கத்தில் ஆளும் கட்சியின் பிரதான செயலாளராகவும் இருந்தார்.
அமைச்சு பதவியை எதிர்பார்த்து ஊடகங்களுக்கு செவ்விகளை வழங்குவார். எனினும் அமைச்சு பதவி கிடைக்கவில்லை. அண்மையில் எமது சங்கத்தின் கூட்டத்திற்கு வந்து, சாமரவும் நிமலும் ரணிலிடம். நாங்கள் எதிர்க்கட்சியில் என்றார்.
சிவனொளிபாத மலைக்கு அவர்கள் அந்த பக்கமாக ஏறுகின்றனர்.நாங்கள் இந்த பக்கமாக ஏறுகிறோம். இறுதியில் அனைவரும் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் ஒன்று சேருவார்கள்.இறுதியில் இரண்டு தரப்பினரும் ஐக்கிய தேசியக்கட்சியிலேயே இணைவார்கள்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் தற்போது இருக்கும் குதிரைகளில் நன்றாக ஓடக்கூடிய மூன்று குதிரைகளே இருக்கின்றன. மைத்திரிபால சிறிசேன பொலன்நறுவையில் நன்றாக ஓடுகிறார்.
தயாசிறி ஜயசேகர பொய் கூறி, ஏதாவது விசர்த்தனங்களை செய்து, குருணாகலில் வென்று விடுவார். அடுத்தது யார் ஷான் விஜேலால் அப்படியானால் சுதந்திரக்கட்சியில் இந்த மூன்று குதிரைகளே நன்றாக ஓடக்கூடிய குதிரைகள்.
எங்களிடம் நிமல்,துமிந்த திஸாநாயக்க, லசந்த அழகியவண்ண, ஜகத் புஷ்பகுமார போன்ற நன்றாக ஓடக்கூடிய குதிரைகள் இருக்கின்றன. நானும் நன்றாக ஓடுவேன். அமரவீரவும் நன்றாக ஓடக்கூடிய குதிரை.
எனினும் அவர்கள் மூன்று பேரும் ஓடட்டும். யார் ஆட்சிக்கு வந்தாலும் நிமல் சிறிபால டி சில்வாவும் சாமரவும் அமைச்சர்கள்.அதில் எந்த மாற்றமும் இல்லை.
எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் துள்ளினாலும் அவர்களால் 113 பெரும்பான்மை பலத்தை பெற முடியாது. அது 100க்கு நூறு வீதம் நிச்சயம் எனவும் சாமர சம்பத் தசநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment