அமைச்சரவையைக் கூட்டி ஆச்சரியத்தக்க முடிவொன்றை எடுத்த அரசாங்கம்
தற்போதைய அரசாங்கம் அமைச்சரவையைக் கூட்டி ஆச்சரியத்தக்க முடிவொன்றை எடுத்ததாகவும்,இலங்கையை குறைந்த வருமானம் கொண்ட நாடாக பிரகடனப்படுத்த மேற்கொண்ட தீர்மானமே அது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
இது மிகவும் வருந்தத்தக்க நிலை எனவும், மத்திய தர வருமானம் பெறும் நாட்டைக் குறைந்த வருமானம் கொண்ட நாடாக அமைச்சரவையே பிரகடனப்படுத்தியிருப்பது வரலாற்றில் பதியப்படும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
தற்போது ராஜபக்சாக்கள் தமது அடியாட்கள் மூலம் அற்புதமான அறிக்கைகளை வெளியிட்டுவருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
கண்டி குண்டசாலை பிரதேசத்தில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் தொகுதிக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அரசாங்கம் பல்வேறு உத்திகளை பிரயோகித்துத் தேர்தலை பிற்போட முயற்சிப்பதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், ஜனாதிபதியும் அதற்கு இணங்குவதாகவும், ஜனாதிபதியின் அந்த இணக்கத்தை மொட்டு ஒரு சேர விரும்புவதாகவும் தெரிவித்தார். ஆனால் இந்த திரிபு நிலையை இல்லாதொழிக்கத் தேர்தலொன்று நடத்தப்பட வேண்டும் என்றே ஐக்கிய மக்கள் சக்தி கோருகிறது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
Post a Comment