அரசியலுக்கு வரும் திட்டம் எதுவும் இல்லை - ரொஷான் மஹாநாம
அரசியலில் பிரவேசிக்கும் திட்டம் இல்லையென இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரொஷான் மஹாநாம தெரிவித்துள்ளார்.
ஆங்கில ஊடகமொன்றின் கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தான் அரசியலில் பிரவேசிப்பதாக இருந்தால் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற போதே அவ்வாறு செய்திருப்பேன் எனவும் அவர் கூறியுள்ளார்.
கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றதன் பின்னர் அரசியலில் இணைந்து கொள்ளுமாறு தனக்கு அழைப்பு வந்ததாகவும், ஆனால் அந்த வாய்ப்பை நிராகரித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்களில் ரொஷான் மஹாநாம பங்கேற்றிருந்ததால் அவர் அரசியலில் பிரவேசிக்கவுள்ளதாக ஊகங்கள் எழுந்திருந்தன என்பதுக் குறிப்பிடத்தக்கது.
Post a Comment