கொத்து ரொட்டியின் விலை குறைக்கப்பட்டது
கொத்து ரொட்டியின் விலை குறைக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் இதனை அறிவித்துள்ளது.
இதன்படி, கொத்து ரொட்டியின் விலை 50 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், நாளை முதல் இந்த விலை குறைப்பு நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இறக்குமதி செய்யப்படும் கோதுமை மாவின் மொத்த விலையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியை கருத்திற் கொண்டு இந்த விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment