Header Ads



ஜனாதிபதியின் லிபரல் பிம்பம் எங்கே போய்விட்டது...?


இன்றைய(05) ஊடக சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் தெரிவித்த கருத்துக்களின் சாரம்சம்.


நாளைய தினம் ஜெனிவாவில் எமது நாடு தொடர்பில் வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. அவ்வாறே, 22 ஆவது திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய இரண்டு விடயங்கள் இது. ஆனால் இந்த நிகழ்ச்சி ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைக்கும் திருத்தம் அல்ல.இது எதிர்பார்த்ததை விட வித்தியாசமான ஓர் ஏற்பாடு.


அன்மையில் நாட்டில் நடந்த சம்பவங்களில் இருந்து நம் நாட்டு ஆட்சியாளர்கள் இன்னும் பாடம் கற்றுக்கொவில்லை. ஏலவே உள்ள ஆட்சியை தொடர்ந்தும் நீடிப்பதற்கும் அதே பாரம்பரிய அரசியல் அமைப்பை முன்னெடுப்பதற்குமாகவே நாளை 22 ஆவது திருத்தத்தை கொண்டு வர முயற்சிக்கின்றனர். ஜனநாயக உலகம் நமக்கு என்ன சொல்கிறது என்பதை புரிந்து கொள்ள இந்த ஆட்சியாளர்கள் தயாராக இல்லை.


புதிதாக புனர்வாழ்வு பணிய சட்டமூலத்தை அமைப்பதற்கான பிரேரணை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது!  இது யாரை புனர்வாழ்வளிக்கக் கொண்டு வரப்படுகிறது? “போதைக்கு அடிமையானவர்கள் என்று ஆரம்பித்து வழிதவறிய போராட்டக்காரர்கள், தீவிரவாதிகள்,நாசகாரர்கள் ஆகியோருக்கு புனவர்வாழ்வளிப்பது முக்கியம்.”இது ஒரு தேசிய பிரச்சினை” இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. என்ன கொடுமை இது?இதை மேற்கொள்ள எத்தனிக்கின்றனர்.


இது என்ன வேடிக்கை? ஜெனிவாவில் வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. உலகமே இலங்கையை உற்று நோக்கிக்கொண்டிருக்கிறது. ஊடகங்களில் லிபரல் பிம்பத்தைக் காட்டும் நம் நாட்டின் தலைவர், தற்போதைய ஜனாதிபதியிடம் இன்று அவரது லிபரல் பிம்பம் எங்கே போய்விட்டது?.

பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி மாணவர் தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இந்நாட்டுக்கு என்ன நடக்கிறது? வரலாற்றில் இருந்து பாடம் கற்க வேண்டும். அடக்குமுறை மூலம் நாட்டை ஆட்சி செய்த தலைவர்களுக்கு உலகம் பல பாடங்களைக் கற்றுக் கொடுத்துள்ளது. ஊடக நாடகங்கள் மூலம் எப்போதும் ஜீவிக்க முடியாது.

No comments

Powered by Blogger.