ராஜபக்ச குடும்பத்தினர் மீது, வீரவன்ச கடும் தாக்குதல்
தந்தை இறப்பதற்கு சற்று நேரத்திற்கு முன்பாக கூட அவரை முன்நிறுத்தி ஏதாவது ஒரு விளையாட்டில் வென்று விடலாம் என ராஜபக்ச குடும்பத்தின் பிள்ளைகள் நினைப்பதாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.
மாத்தறை நுபே பிரதேசத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ராஜபக்ச குடும்பத்தின் பிள்ளைகளே தந்தைக்கு இந்த நிலைமை ஏற்பட காரணமாக இருந்தனர். ஆரம்பத்தில் மூன்று ராஜபக்சவினர் அமைச்சரவையில் இருந்தனர். ஆனால் கடந்த முறை 5 பேர் இருந்தனர்.
வெட்கம், அச்சம் என்ற ஒன்று இருந்திருந்தால், அமைச்சரவையில் மூன்று பேரை மாத்திரம் வைத்திருந்திருப்பர்கள் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நாற்காலி ஒன்றில் அமர்ந்து கால்களை மேலே போட்டுக்கொண்டு ஐயோ எமக்கு என்ன நடந்தது என்று எண்ணிக்கொண்டு ஓய்வாக இருக்க வேண்டிய காலம்.
ஆனால், அவரை ஓய்வாக இருக்க விடுவதில்லை. நாற்காலியில் இருந்து எழுப்பி அழைத்துச் செல்கின்றனர். மகிந்த ராஜபக்சவுக்கு தற்போது யார் ஜனாதிபதி என்பதுகூட நினைவில் இல்லை.
ஜனாதிபதியாக இருப்பது கோட்டாபயவா, ரணிலா என்பதும் அவருக்கு தெரியாது. அப்படியான நிலைமையில் இருப்பவருக்கு இப்படி செய்யலாமா?.
கடந்த பொதுத் தேர்தலில் மாத்தறையிலும் ராஜபக்ச ஒருவரை நிறுத்தினர். அவர் ராஜபக்ச குடும்பத்தின் ஒரு நாய் குட்டி. பசில் ராஜபக்சவுக்கு காலையிலும் மதியமும் உணவு பரிமாறியவரை மாத்தறையில் நிறுத்தினர்.
குடும்ப பேராசை. இந்த குடும்ப பேராசை இறுதியில் பசில் ராஜபக்ச அமெரிக்காவுக்கு திரும்பி செல்லும் நிலைமையை உருவாக்கியது எனவும் விமல் வீரவங்ச மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment