இவர்களை கண்டால், தகவல் தாருங்கள் - பொலிஸார் அறிவிப்பு
தேடப்படும் சந்தேக நபர்களை அடையாளம் காண்பதில் காவல்துறையினர் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர் . இவர்கள் கடந்த ஆகஸ்ட் 18 ஆம் திகதி கொழும்பு - யூனியன் பிளேஸ் பகுதியில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் நடத்தப்பட்ட சட்டவிரோத கூட்டம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் அங்கம் வகித்தவர்கள் என காவல்துறையினர் தெரிவித்தனர் .
இதன்படி , இந்த சந்திப்பு தொடர்பில் கிடைக்கப்பெற்ற காணொளிக் காட்சிகளின் அடிப்படையில் இதுவரை அடையாளம் காணப்படாத மற்றும் கைது செய்யத் தேடப்படும் சந்தேகநபர்கள் குழுவை அடையாளம் காண்பதற்கு காவல்துறையினர் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர் .
இந்தக் குழு தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் கொம்பனித்தெரு காவல் நிலைய பொறுப்பதிகாரியின் 0718591561 அல்லது குற்றப் பிரிவு பொறுப்பதிகாரியின் 0718594414 என்ற இலக்கத்திற்கு அறிவிக்குமாறு காவல்துறையினர் கோருகின்றனர் .
Post a Comment