ஜாமியா நளீமிய்யாவில் தேசிய மீலாதுன் நபி விழா, பிரதம அதீதி பிரதமர் தினேஷ், முத்திரை வெளியீடும் நடைபெறவுள்ளது
(அஜ்வாத் பாஸி )
இவ்வருடத்திற்கான(2022) தேசிய மீலாதுன் நபி விழா பேருவளை ஜாமியா நளீமிய்யா கலாபீட மாநாட்டு மண்டபத்தில் எதிர்வரும் 09ஆம் திகதி நடைபெறவுள்ளதாக முஸ்லிம் சமய கலாசார திணைக்கள பணிப்பாளர் அல்ஹாஜ் இப்றாஹீம் அன்ஸார் தெரிவித்தார்.
சீனன்கோட்டை பள்ளிச்சங்க நிர்வாகிகள் மற்றும் ஊர் தனவந்தர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுடனான விசேட சந்திப்பு நேற்று (01) சீனன்கோட்டை பாஸிய்யா ஜும்ஆ பள்ளிவாசலில் திணைக்கள பணிப்பாளர் இப்றாஹீம் அன்ஸார் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தின் இறுதியில் அனைவரினதும் ஏகோபித்த முடிவுகளின் பிரகாரம் இவ்வருடத்திற்கான மீலாத் நிகழ்வுகள் ஜாமியா நளீமிய்யா கலாபீடத்தில் நடாத்துவதாக தீர்மானிக்கப்பட்டது. அதேவேளை, நிகழ்வை சிறப்பிக்குமுகமாக நளீமிய்யா கலாபீடத்தை மையப்படுத்தி முதல்நாள் முத்திரை வெளியீடும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
திணைக்களப்பணிப்பாளர் இப்றாஹீம் அன்ஸார் தலைமையில் நடைபெறவுள்ள தேசிய மீலாத் விழாவில் பிரதம அதிதியாக பிரதமர் தினேஷ் குணவர்தன கலந்து சிறப்பிக்கவுள்ளார்.
கௌரவ அதிதியாக கலாசார அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க கலந்து கொள்வார்.
விசேட அதிதிகளாக வெளிநாட்டு அமைச்சர் அலி சப்ரி, இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்த மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான மர்ஜான் பளீல், இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் உட்பட முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், பள்ளிச்சங்க உறுப்பினர்கள், நளீமிய்யா கலாபீட நிர்வாகிகள், வெளிநாட்டு இராஜதந்திரிகள் உட்பட முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளதாக கலாசார திணைக்கள அதிகாரி ஷெய்க் முப்தி முர்ஸி தெரிவித்தார்.
ஜாமிஆ நழீமிய்யாவில் கடந்த 45 வருடங்களுக்கு மேலாக கீழ்த்தரமான அரசியலை நுழைக்க முடியவில்லை. தற்போது அந்த கேவலத்தை அதன் ஸ்தாபகர் மர்ஹூம் நளீம் ஹாஜியார் அவர்கள் விரும்பவில்லை. சுயநல அரசியலில் அவிந்து நாசமாகும் அனைத்துச் சக்திகளும் அவர்களுக்கு செல்வாக்கைப் பலப்படுத்த ஜாமிஆவைப் பயன்படுத்த முயற்சி செய்கின்றனர் என்ற இரகசியத்தை பலரும் அறியாமலிருக்கமுடியாது. இந்த நிலைமைக்கு ஜாமிஆ செல்லாமல் அல்லாஹ்வுக்குப் பயந்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனப் பணிவாக வேண்டிக் கொள்கின்றேன்.
ReplyDelete