சர்ச்சையை ஏற்படுத்திய ஆசிரியை நடனமாடும் வீடியோ
நீர்கொழும்பு உள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியை ஒருவர் நடனமாடும் காணொளி ஒன்று அண்மையில் சமூக ஊடகங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இது தொடர்பில், மேல் மாகாண கல்விப் பணிப்பாளரின் கையொப்பத்துடன், மேல் மாகாண கல்வி திணைக்களம் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், “சிறுவர் தினத்தை முன்னிட்டு பாடசாலையில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்ற கூட்டுச் செயற்பாட்டின்போதே குறித்த ஆசிரியை மற்றும் மாணவியர் நடனமாடியுள்ளனர்.
இதன்படி, இது தொடர்பில் மேலதிக நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியமில்லை என” குறித்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment